21.12.2020 நேரம் பிற்பகல் 2:10 மணி நான் நேற்றைய பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல தற்சமயம் தென் சீன கடல் பகுதிகளில் 'KROVANH' புயல் நிலவி வருகிறது நேற்று புயலாக உருவெடுத்த பின் முதலில் வடக்கு நோக்கிய நகர்வை எடுத்த அது பின்னர் வடக்கு மற்றும் மத்திய #வியட்நாம் கடலோர பகுதிகளில் நிலவிவரும் குறைந்த கடல் பரப்பில் வெப்பநிலை மற்றும் அதீத அழுத்தத்தின் காரணமாக காத்திருந்து யோசித்து இப்பொழுது நாம் எதிர்பார்த்து இருந்த அந்த திசையில் பயணித்து வருகிறது இது தொடர்பான விரிவான விளக்கங்களை அதிகாலை நேர குரல் பதிவில் தெளிவாக கூறியிருக்கிறேன் - https://youtu.be/Ab34tZGbSoo நான் முன்பே உங்களிடம் கூறியிருந்ததை போல போல அது வியட்நாம் நாட்டின் தென் மேற்கு கடல் பகுதிகளை நெருங்க முற்படுகையில் வலுக்குறைந்த போகும் ஆனாலும் வடக்கே பயணித்து எதுவுமே இல்லாமல் சில மணி நேரங்களில் மடிந்து விடுவதற்கு வலுக்குறைந்தாலும் நீடித்து சில நாட்கள் வாழலாம் என்கிற முடிவை அந்த "#KROVAN" புயல் எடுத்துவிட்டது போலும்...
பொதுவாகவே மேற்கு பசிபிக் கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களின் நகர்வுகளை ஆராய்வது எனக்கு மிகவும் பிடிக்கும் ஏனெனில் அவை நீடித்து உயிர்பிழைக்க அத்தனை போராட்டங்களை மேற்கொள்ளும்.
அதனுடைய நகர்வுகள் தொடர்பாக நாம் ஏற்கனவே விரிவாக முந்தைய குரல் பதிவுகளில் விவாதித்து இருக்கிறோம்.
தற்போதைய வானிலை அமைப்பு
====================
தற்சமயம் மாலத்தீவுகளுக்கு தென் மேற்கே ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது அது தீவிரம் அடைந்தும் வருகிறது அது மேற்கு நோக்கி நகர உள்ளது இதன் காரணமாகவே தமிழக கடலோர மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இயல்பை விட காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது.காற்றின் வேக மாறுபாடு தொடர்பாக முன்பாகவே பதிவு செய்து இருந்தேன் இந்த பதிவின் இறுதியிலும் அதே சில விஷயங்களை குறிப்பிடுகிறேன்.
இவைதவிர்த்து தெற்கு மத்திய வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு சுழற்சி நிலவி வருகிறது அதன் காரணமாக வங்க்கடலில் நிலவும் ஈரப்பதம் மிக்க காற்றை மாலத்தீவுகள் கடல் பகுதிகளில் இருக்கும் சுழற்சி தம்வசம் இழுப்பதால் நான் முன்பு கூறியிருந்த்தை போல அதிக பலன் அடைய இருப்பது இலங்கை தான் இன்றும் இலங்கையின் பல்வேறு இடங்களிலும் பரவலான மழை உண்டு.
வெப்பநிலை குறைபாடு
==================
நான் நேற்றைய குரல் பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழகத்தில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருக்கும் இன்றுடன் ஒப்பிடுகையில் நாளையும் அதனுடன் ஒப்பிடுகையில் நாளை மறுநாளும் இரவு , நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வெப்பநிலை குறைபாடு உணரப்படும்.
#நீலகிரி , #கொடைக்கானல் , #ஏற்காடு உட்பட மலை பகுதிகளை தவிர்த்து விட்டு பார்த்தாமேயானால் மாநிலத்தின் பிற பகுதிகள் உடன் ஒப்பிடுகையில் #கிருஷ்ணகிரி , #தர்மபுரி , #திருப்பத்தூர் , #சேலம் , #நாமக்கல் , #திண்டுக்கல் , #வேலூர் , #தேனி மாவட்ட பகுதிகளிலும் #ஜவ்வாதுமலை யை ஒட்டிய #திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளிலும் #திருப்பூர் - #தாராபுரம் இடைப்பட்ட பகுதிகளிலும் #ஈரோடு மாவட்ட வடக்கு பகுதிகளிலும் பனிப்பொழிவின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.
காற்றின் வேக மாறுபாடு
===============
ராமேஸ்வரம் , #மண்டபம் பகுதிகளில் மணிக்கு அதிகபட்சமாக 50 கி.மீ முதல் 60 கி.மீ கள் வேகத்தில் காற்று வீசக்கூடும்
அதேபோல #காரைக்கால் , #நாகப்பட்டினம் , #புதுச்சேரி , #கடலூர் , #மயிலாடுதுறை , #திருவாரூர் உட்பட வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு அதிகபட்சமாக 50 கி.மீ வேகம் வரையிலும் காற்று வீசக்கூடும் மரங்கள் அதிகமாக இருக்கும் புறநகர் மற்றும் கிராம பகுதிகளில் காற்றின் வேக தாக்கத்தை எளிதாக உணர முடியும்.
#திருச்சி , #தஞ்சை , #கும்பகோணம் , #புதுக்கோட்டை , #மதுரை ,#ராமநாதபுரம் , #தூத்துக்குடி ,#காரைக்குடி , #தேவகோட்டை , #சிவகங்கை என தென் உள் , உள் மற்றும் தென் கடலோர மாவட்டங்களின் பல்வேறு இடங்களிலும் மணிக்கு அடதிகபட்சமாக 45 கி.மீ வேகம் வரையிலும் காற்று வீசக்கூடும்.
மேலும் பல தகவல்களுடன் இன்னும் சற்று நேரத்தில் குரல் பதிவு செய்கிறேன்.
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com