அடித்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம் ?
19.11.2020 நேரம் மாலை 4:40 மணி நாம் எதிர்பார்த்து இருந்தது போலவே தற்சமயம் மத்திய தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியிருக்கிறது.
#மேடன்_ஜூலியன்_அலைவு (#Madden_julian_oscillation) அதனுடைய 2 வது கட்டத்தில் (Phase 2) அதாவது நமது இந்திய பெருங்கடல் பகுதிகளில் (#Indian_ocean_basin) 1 க்கும் அதிகமான வீச்சு அளவுடன் வலுவாக உள்ளது.இது அரபிக்கடலில் தற்சமயம் நிலவிக்கொண்டு இருக்கும் அந்த #குறைந்த_காற்றழுத்த_தாழ்வு_பகுதி மென்மேலும் தீவிரமடைய உறுதுணையாக உள்ளது.அடுத்த 2 நாட்களுக்கும் #MJO வலுவுடன் அதனுடைய 2 வது கட்டத்தில் (Phase 2) தொடரும் அதன் பின்னர் அது அதனுடைய 3 வது (Phase 3) கட்டத்துக்கு பயணித்து அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் வலுக்குறைய தொடங்கலாம்.#MJO இந்த காலகட்டத்தில் இந்திய பெருங்கடல் பகுதிகளில் இருந்தாலே போதுமானது அதன் வலு ஒரு பொருட்டல்ல அது 4 (Phase 4) வது மற்றும் 5 வது (Phase 5) கட்டத்தில் இருந்தாலும் அது வங்கக்கடல் பகுதிக்கு சாதகமான சூழலே.
MJO தொடர்பான அடிப்படை தகவல்களை அறிய - https://youtu.be/drbJK3nHGzo
MJO சாதகமாக இருப்பதால் அடுத்த இரண்டு நாட்களில் அதாவது 21.11.2020 ஆகிய நாளை மறுநாள் அந்த அரபிக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒரு #காற்றழுத்த_தாழ்வு_மண்டமாக (#Depression) மத்திய அரபிக்கடல் பகுதிகளில் உருவெடுக்கலாம் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மேலும் தீவிரமடையவும் வாய்ப்புகள் உண்டு.இதனால் தமிழகத்துக்கு எந்த வித பாதிப்புகளும் கிடையாது நேரடியான மழை வாய்ப்புகள் எனவும் எதுவும் இருக்கப்போவது இல்லை. மாறாக இதுநாள் வரையில் அரபிக்கடலில் இருந்த அந்த சுழற்சி காற்றை தம்வசம் இழுத்ததால் தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வீரியம் அதிகரித்து இருந்தது கடந்த 2 நாட்களாக தென் உள் , தென் , மேற்கு உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் மழை பதிவாகி வந்தது.
அந்த சுழற்சி தற்பொழுது தீவிரமடைந்து மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால் அதனுடைய தாக்கம் குறைய தொடங்கியுள்ளது இதனால் அடுத்து வரக்கூடிய நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை வாய்ப்புகள் குறைந்து காணப்படும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வ்ப்பொழுது சில இடங்களில் மழை பதிவாகும்.பரவலான மழைக்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் வாய்ப்புகள் குறைவு.
மீண்டும் என்றிலிருந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை அதிகரிக்கும்?
====================
தற்சமயம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.#மேடன்_ஜூலியன்_அலைவு உட்பட #கடல்_சார்_அலைவுகளின் சாதகத்தன்மையால் அது அடுத்து வரக்கூடிய சில நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுக்கும் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் மென்மேலும் தீவிரமடையவும் வாய்ப்புகள் உண்டு.அதனுடைய நகர்வுகள் மற்றும் எங்கே கரையை கடக்கும் என்பதனை அறிய இன்னும் சில நாட்கள் காத்திருங்கள் அதற்குள்ளாக மாதிரிகளை பார்த்து குழப்பம் அடையாதீர்கள் முதலில் உருவாகட்டும் பின்னர் வலுவடையட்டும் அதன் பிறகு அதனுடைய நகர்வுகளை ஆராயலாம்.
எதுவாயினும் அந்த சுழற்சி தென்மேற்கு வங்கக்கடலை நெருங்குகையில் 24-11-2020 ஆம் தேதி வாக்கில் தமிழக கடலோர மாவட்டங்களில் மீண்டும் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம்.அதன் பின்னர் சில தரமான சிறப்பான சம்பவங்களும் உண்டு.
By
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com