20-11-2020 நேரம் இரவு 9:50 மணி இன்றைய பிற்பகல் நேர குரல் பதிவில் அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான அறிக்கையில் நாம் எதிர்பார்த்து இருந்தது போல #நெல்லை , #கன்னியாகுமரி , #தூத்துக்குடி மாவட்ட பகுதிகள் உட்பட தென் மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பதிவாகி இருப்பதை அறிய முடிகிறது.#திருநெல்வேலி AWS இல் இன்று இதுவரையில் 19 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.
நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக இடங்களிலும் வரண்ட வானிலையே நிலவும்.இரவு ,நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இன்றுடன் ஒப்பிடிகையில் 1°C முதல் 2°C வரையில் வெப்பநிலை குறைந்து காணப்படலாம்.சமவெளி பகுதிகளை பொறுத்தவரையில் #தர்மபுரி பகுதியில் இரவு அல்லது அதிகாலை நேரத்தில் குறைந்தபட்சமாக 19°C முதல் 18°C வெப்பநிலை பதிவாகலாம் #ஓசூர் பகுதிகளை பற்றி சொல்லவே தேவையில்லை.பொதுவாக #சேலம் , #நாமக்கல் , #கிருஷ்ணகிரி , #ஈரோடு , #திருப்பூர் மாவட்டங்களில் வெப்பநிலை வேறுபாடு (#குறைபாடு) அதிகமாக இருக்கலாம். #சென்னை , #மதுரை , #திருச்சி , #புதுச்சேரி , #கடலூர் உட்பட தமிழகத்தின் அநேக இடங்களிலும் இன்றுடன் ஒப்பிடுகையில் நாளை இரவு நேர வெப்பநிலை குறைந்தே இருக்கும்.
நானும் நாளை #சென்னை வரை பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.
#Gati_Cyclone (#கதி_புயல் ) தொடர்பான உங்களுடைய கேள்விகளுக்கு எனது இப்போதைய பதில் " அந்த குழந்தை முதலில் பிறக்கட்டும் அதன் பின்னர் நடக்கட்டும் அதனை பின்தொடர்ந்து உரிய நேரத்தில் உண்மையான செய்திகளை அடுத்து வரக்கூடிய நாட்களிலும் வழங்குவோம் " என்பது தான்.
இதுவரையில் பதிவாகி இருக்கும் மழை அளவுகளின் படி சில பகுதிகளின் நிலவரம்
===================
திருநெல்வேலி AWS - 19 மி.மீ
திருச்செந்தூர் - 9 மி.மீ
பாம்பன் - 5 மி.மீ
கன்னியாகுமரி - 4 மி.மீ
பாளையங்கோட்டை - 3 மி.மீ
சாத்தான்குளம் - 3 மி.மீ
தூத்துக்குடி துறைமுகம் - 2 மி.மீ
ராதாபுரம் - 2 மி.மீ
முழுமையான மழை அளவுகள் பட்டியலை காலை பதிவிடுகிறேன்.
அனைவருக்கும் எனது இரவு வணக்கங்ளை தெரிவித்துக் கொள்கிறேன்🙏
#Emmanuel_Paul_Antony
#tamilnaduweather.com