22-11-2020 நேரம் இரவு 7:20 மணி தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலைக்கொண்டு ஒரு #Gati_Cyclone (#கதி_புயல்) சில மணி நேரங்களுக்கு முன்பாக ஒரு #மிக_தீவிர புயலாக (#Very_Severe_cyclone) உருவெடுத்தது அது #சோமாலிய கடல் பகுதிகளை.நெருங்கி வருவதை நான் இணைத்திருக்கும் செயற்கைகோள் படங்களில் கானலாம் அடுத்த சில மணி நேரங்களில் #Somalia வின் கடலோர பகுதிகளில் கரையை கடக்கும்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த #குறைந்த_காற்றழுத்த_தாழ்வு_பகுதி யானது தீவிரமடைந்து சில மணி நேரங்களுக்கு முன்பாக #தீவிர_காற்றழுத்த_தாழ்வு_பகுதி (#Well_marked_low_pressure_area) என்கிற நிலையை அடைந்தது சில நிமிடங்களுக்கு முன்பாக நான் அதனை Track செய்த பொழுது அதன் சுழற்சியின் அதிகபட்ச வேகம் மணிக்கு 26 knots களாக இருந்தது அது தீவிரமடைந்து வருவதை இது உறுதிப்படுத்துகிறது எதிர்பார்த்ததை விட முன்பாக அடுத்த சில மணி நேரங்களில் அது #குறைந்த_காற்றழுத்த_தாழ்வு_மண்டலம் என்கிற நிலையை அடைந்து விட்டதாக அறிவிப்புகள் வெளியாகலாம்.நாளை அது வங்கக்கடலில் #நிவர் (#Nivar) புயலாக உருவெடுக்கலாம்.25-11-2020 ஆம் தேதி வாக்கில் அது தமிழக வடகடலோர மாவட்டங்ளை நெருங்க முற்படும்.
அச்சத்தை தவிர்த்து தேவையான முன் ஏற்பாடுகளை செய்து கொள்வதே ஆக சிறந்தது.
#Emmanuel_Paul_Antony
#tamilnaduweather.com