22-11-2020 நேரம் காலை 10:40 மணி நான் நேற்றைய நள்ளிரவை ஒட்டிய அதிகாலை நேர காணொளியில் நமது Youtube பக்கத்தில் குறிப்பிட்டு கூறியிருந்ததை இருந்தது போலவே தற்சமயம் மாதிரிகள் தங்களது முந்தைய கணிப்புகளை மாற்றிக்கொண்டு வட தமிழக பகுதிகளை கரையை கடக்கும் இடங்களாக காட்ட தொடங்கியுள்ளன இன்றைய பிற்பகல் நேரத்தில் மாதிரிகளின் புதுப்பிப்பை பாருங்கள் (#Next_updated_run_of_weather_models) வட தமிழகத்துக்கான வாய்ப்புகள் உறுதியாகும்.இன்னமும் அது குறிப்பிட்ட எந்த ஒரு பகுதியில் கரையை கடக்கும் என்பது கேள்விக்குறி தான்.ஆனபோதும்... எதுவாயினும்....வட கடலோர மாவட்ட மக்கள் மழையை எதிர்கொள்ள தயாராகுங்கள்.அதனுடைய நகர்வுகளை பொறுத்து பிற பகுதிகளிலும் அங்கும் இங்குமாக மழை பதிவாகும்.
டெல்டாவின் கடலோர மாவட்டங்கள் , #புதுச்சேரி , #கடலூர் உட்பட வட கடலோர மாவட்டங்களில் கட்டாயம் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
அடுத்து வரக்கூடிய நாட்களில் நாம் அதனுடைய நகர்வுகளை மேலும் விரிவாக விவாதிக்கலாம்.
இன்றைய அடுத்த 24 மணி நேர வானிலையை பொறுத்தவரையில் நேற்றைய சூழல்களே தொடரும்.தற்சமயம் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு மத்திய வங்க்ககடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டு இருக்கிறது.