30-11-2020 நேரம் பிற்பகல் 1:00 மணி தற்சமயம் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் அந்த #குறைந்த_காற்றழுத்த_தாழ்வு_மண்டலம் (#Depression) தொடர்பாக காலையில் பதிவிட்டு இருந்தேன் அடுத்த சில மணி நேரங்களில் அது தீவிரமடைந்து ஒரு #ஆழ்ந்த_காற்றழுத்த_தாழ்வு_மண்டலம் (#Deep_Depression) என்கிற நிலையை அடையலாம்.மேலும் இது அடுத்து வரக்கூடிய நாட்களில் மேற்கு - வட மேற்கு திசையில் பயணிக்கும் ஒரு வேளை அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மேலும் தீவிரமடைந்து ஒரு புயலாக உருவெடுக்கும் பட்சத்தில் அதற்கு மாலத்தீவுகள் நாட்டின் தேர்வு சொல்லான " #BUREVI_CYCLONE " ( " #புரெவி ) என்கிற பெயர் வழங்கப்படும்.
இலங்கைக்கான வெள்ள அபாய எச்சரிக்கை
===================
02-12-2020 அன்று மாலை/இரவு அல்லது 03-12-2020 ஆம் தேதி வாக்கில் அது இலங்கையின் (#Srilanka) வட கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு கடலோர பகுதிகளில் கரையை கடக்க முற்படும் 02-12-2020 முற்றும் 03-12-2020 ஆம் தேதி #இலங்கை (#Cylone) யின் வடக்கு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பரவலாக பதிவாகும் அதன் பின்னர் 04-12-2020 ஆம் தேதி வாக்கில் இலங்கையின் மேற்கு கடலோர பகுதிகளிலும் கனமழை பதிவாகலாம்.இலங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.#முல்லைத்தீவு , #கிளிநொச்சி (#jafna) , #மன்னார் உட்பட இலங்கையின் வடக்கு பகுதிகளில் சேதங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.
புதுச்சேரி - காரைக்கால் மழை வாய்ப்புகள்
===================
அந்த சுழற்சி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கையை நெருங்குகையில் அதாவது 02-12-2020 மற்றும் 03-12-2020 ஆம் தேதிகளில் #காரைக்கால் நகரப்பகுதி உட்பட #காரைக்கால் மாவட்டத்தில் கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது அதேபோல #புதுச்சேரி உட்பட #புதுச்சேரி மாவட்டடத்திலும் கிழக்கு திசை காற்று குவிவதால் மழைக்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.அந்த சுழற்ச்சி மன்னார் வளைகுடா பகுதிகளை அடைந்து பின்னர் குமரிக்கடல் பகுதிகளை நெருங்கும் பட்சத்தில் அதற்கு அடுத்து வர்க்கூடிய நாட்களில் #காரைக்கால் மற்றும் #புதுச்சேரியில் அவ்வ்ப்பொழுது மழை வாய்ப்புகள் உண்டு காற்றின் சாதகத்தண்மையை பொறுத்து சில நாட்கள் தொடர் கனமழையும் டிசம்பர் முதல் வாரத்தில் 2 ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு பதிவாகலாம்.#புதுச்சேரி , #காரைக்கால் உட்பட #புதுச்சேரி மாநிலத்தில் 2020 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்புக்கும் அதிகமான அளவு மழையுடன் நிறைவடையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
புயல் அல்லது ஒரு சுழற்சியின் நகர்வுகள் தொடர்பான விளக்கம்
------------------------------------------------
ஒரு சுழற்சி புயலாகவோ அல்லது அதற்கும் அதிகமாகவோ தீவிரமடைந்தால் அதனுடைய நகர்வுகளை தீர்மானிப்பதில் மேலடுக்கில் நிலவும் சூழல்களே முக்கிய பங்காற்றும் அதே சமயம் அது ஒரு
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அதற்கும் குறைவான நிலையில் இருந்தால் அதனுடைய நகர்வுகளை மத்திய மற்றும் கீழ் அடுக்கில் நிலவும் சூழல்களே நிர்ணயம் செய்யும்.
தமிழகத்தில் எங்கெங்கு சிறப்பான மழை பதிவாகலாம்.தற்போது நிலவி வரும் வானிலை சூழல்களின் அடிப்படையில்
============================
அது இலங்கையை நெருங்கி தீவிரமடையும் பொழுது மேலடுக்கில் நிலவும் சூழல்கள் அதில் வடமேற்கு திசை நகர்வை ஏற்படுத்தும் அதே சமயம் இலங்கையில் கரையை கடந்து அதன் தீவிரம் குறையும் பொழுது மத்திய மற்றும் கீழடுக்கில் நிலவும் சூழல்கள் அதனை வழிநடத்தும்.
அந்த சுழற்சி தென்மேற்கு வங்க்கடல் பகுதிகளில் நிலைக்கொள்ளும் பொழுது #நாகப்பட்டினம் , #மயிலாடுதுறை , #திருவாரூர் , #தஞ்சை மாவட்ட கடலோர பகுதிகள் உட்பட #டெல்டா மாவட்ட கடலோர பகுதிகளில் ஆங்காங்கே வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களிலும் அவ்வப்பொழுது மழை பதிவாகும்.
ஆகவே அது இலங்கையை அடைந்து பின்னர் தீவிரம் சற்று குறையும் பட்சத்தில் மன்னார் வளைகுடா பகுதிகளை அடைந்து குமரிக்கடல் பகுதிகளை 04-12-2020 ஆம் தேதி வாக்கில் நெருங்கும்.அதன் காரணத்தால் 03-12-2020 / 04-12-2020 தேதி முதல் தமிழக தென் கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பதிவாகலாம். #தூத்துக்குடி , #நெல்லை , #கன்னியாகுமரி , #தென்காசி ,#விருதுநகர் , #மதுரை , #தேனி மற்றும் #ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பதிவாகலாம்.
அது குமரிக்கடலை அடைந்து பின்னர் லட்சத்தீவு கடல் பகுதி அல்லது அரபிக்கடல் பகுதிகளை அடைய முற்படுகையில் #தூத்துக்குடி , #கன்னியாகுமரி #தென்காசி , #நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் ஆங்காங்கே கனமழை முதல் மிக கனமழையும் பதிவாகலாம்.
நான் முந்தைய குரல் பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தது போல அது லட்சத்தீவுகள் அல்லது அரபிக்கடல் பகுதிகளை அடைந்து விட்டால் மென்மேலும் தீவிரமடையும் அது மேற்கு திசையில் அரபிக்கடல் பகுதிகளில் தீவிரமாக நகர்ந்து செல்லும் பொழுது அது காற்றை தம்வசம் இழுப்பதால் #நாமக்கல் , #சேலம் , #ஈரோடு , #திருப்பூர் , #கோவை , #திண்டுக்கல் மாவட்ட மேற்கு பகுதிகள் உட்பட #உள் , மேற்கு உள் மற்றும் மேற்கு மாவட்டங்களிலும் மழைக்கான வாய்ப்புகள் உண்டு .
முக்கியமாக #மேகமலை , #கொடைக்கானல் , #குன்னூர் , #பாபநாசம் உட்பட மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு பகுதிகள் அந்த நேரத்தில் கவனிக்கப்பட வேண்டியவை
மேலும் பல தகவல்களுடன் இன்னும் சற்று நேரத்தில் நமது Youtube பக்கத்தில் விரிவாக குரல் பதிவு செய்கிறேன்.
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
EMMANUEL PAUL ANTONY
FACEBOOK PAGE : Puducherry weather - http://www.facebook.com/puduvaiweatherman/
WEBSITE : www.tamilnaduweather.com
YOUTUBE CHANNEL : http://www.youtube.com/c/tamilweathervlog
Contact number
=========
Mobile : 7092887023
Email : puducherryweather@gmail.com
Puducherry Weatherman FB Group : https://www.facebook.com/groups/310938342825980/
அந்த சுழற்சியை பின் தொடர்ந்து அதன் நிகழ் நேர நகர்வினை தினமும் பதிவிடுகிறேன்.