29-11-2020 நேரம் பிற்பகல் 12:20 மணி நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைக்கொண்டு இருந்த அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்சமயம் தீவிரமடைந்து ஒரு தீவிர (அ) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (#Well_marked_low_pressure_area) என்கிற நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைக்கொண்டு உள்ளது அடுத்த 24 மணி நேரத்தில் அது மேலும் தீவிரமடைந்து ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Depression) என்கிற நிலையை அடையலாம் அதன் பின்னர் அது மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து 01-12-2020 ஆம் தேதி வாக்கில் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளை நெருங்கும் இதன் காரணமாக 01-12-2020 அல்லது 02-12-2020 ஆம் தேதிகளின் வாக்கில் தமிழக வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மீண்டும் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கும் 02-12-2020 அல்லது 03-12-2020 ஆம் தேதி வாக்கில் தென் மாவட்டங்களிலும் மழையின் அளவு அதிகரிக்கும்.தென் மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புகளும் உண்டு.
இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தென் , மேற்கு உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாகலாம்.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்கள் பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்யப்படும்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=====================
கன்னிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 48 மி.மீ
தம்மம்பட்டி ( சேலம் மாவட்டம்) - 40 மி.மீ
மலையூர் ( புதுக்கோட்டை மாவட்டம்) - 36 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 35 மி.மீ
இளையங்குடி (சிவகங்கை மாவட்டம்) - 33 மி.மீ
புதுச்சத்திரம் (நாமக்கல் மாவட்டம்) - 30 மி.மீ
ஆயிங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 26 மி.மீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர் மாவட்டம்) - 23 மி.மீ
மணிமுத்தாறு அணை (நெல்லை மாவட்டம்) - 22 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 21 மி.மீ
பாபநாசம் அணை (நெல்லை மாவட்டம்) - 20 மி.மீ
ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 20 மி.மீ
தனியாமங்களம் (மதுரை மாவட்டம்) - 19 மி.மீ
வெம்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 19 மி.மீ
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல் மாவட்டம்) - 19 மி.மீ
ஆத்தூர் (சேலம் மாவட்டம்) - 18 மி.மீ
பெருங்களூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 16 மி.மீ
மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்) - 15 மி.மீ
பர்லியார் (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
எருமப்பட்டி (நாமக்கல் மாவட்டம்) - 14 மி.மீ
மானாமதுரை (சிவகங்கை மாவட்டம்) - 14 மி.மீ
மேட்டுப்பட்டி (மதுரை மாவட்டம்) - 14 மி.மீ
கடவனூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 13 மி.மீ
பேராவூரணி (தஞ்சை மாவட்டம்) - 13 மி.மீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 13 மி.மீ
ஜமுனமரத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) -13 மி.மீ
பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம்) - 13 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 11 மி.மீ
பொன்னையார் அணை (திருச்சி மாவட்டம்) -11 மி.மீ
திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம்) - 11 மி.மீ
ஓசூர்(கிருஷ்ணகிரி மாவட்டம்) - 11 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 10 மி.மீ
அரிமழம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 10 மி.மீ
சூலூர் ( கோவை மாவட்டம்) - 10 மி.மீ
திருப்பாளபந்தல் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 10 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
10 மி.மீ மற்றும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
