25-11-2020 நேரம் காலை 9:50 மணி இன்று காலை 6:00 மணி வாக்கில் தீவிர புயலான #நிவர் (#Nivar_Cyclone) Lattitude 10.4°N மற்றும் Longitude 82°E இல் #கடலூர் பகுதிக்கு 290 கி.மீ கிழக்கு தென் கிழக்கிலும் #புதுச்சேரி க்கு 300 கி.மீ கிழக்கு - தென் கிழக்கிலும் #சென்னை க்கு 350 கி.மீ தென்-தென்கிழக்கு திசையிலும் நிலைகொண்டு இருந்தது.
நேற்றைய நள்ளிரவை ஒட்டிய அதிகாலை நேர காணொளியில் நான் குறிப்பிட்டு இருந்த திசையில் #நிவர் புயல் பயணித்து வருவதைத் தான் இது உறுதிப்படுத்துகிறது. நாம் எதிர்பார்த்த படி அடுத்த சில மணி நேரங்களில் அது மிக தீவிர புயலாக உருவெடுக்கும் (#Very_severe_cyclone) என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அடுத்து வரக்கூடிய சில மணி நேரங்களில் அது வடமேற்கு திசையில் நகர்ந்து 25-11-2020 ஆகிய இன்று இரவு/நள்ளிரவு அல்லது 26-11-2020 ஆகிய நாளை அதிகாலை #புதுச்சேரி - #சென்னை இடையே #கல்பாக்கம் /#செய்யூர் / #மாமல்லபுரம் அருகே கரையை கடக்க முற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.#கரையை நெருங்குகையில் அதிகபட்சமாக நாம் குறிப்பிட்டு இருக்கும் பகுதிகளில் இருந்து சிறு மாறுதல்கள் இருக்கலாம் அதாவது அவைகளுக்கு கொஞ்சம் அருகே இருக்கும் பகுதிகளில் கரையை கடக்கலாம்.மற்றபடி #சென்னை - #கடலூர் இடைப்பட்ட அநேக இடங்களிலும் இன்று இரவு முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும்.
#புதுச்சேரி , #கடலூர் பகுதிகளை ஒட்டிய கடல் பகுதிகளுக்கு மிக நெருக்கத்தில் வந்து பின்னர் அது வட-வட மேற்கு திசையை எடுக்க முற்படலாம் .அப்பொழுது புதுச்சேரியில் மணிக்கு 110 கி.மீ க்கும் அதிகமான அளவு காற்றின் வேகம் இருக்கலாம் (இன்று இரவு மற்றும் நாளை அதிகாலை நேரங்களில்)
அதே போல #புதுச்சேரி , #கடலூர் ,#மரக்காணம் ,#செய்யூர் சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #விழுப்புரம் , #கடலூர் , #புதுச்சேரி ,#சென்னை ,#செங்கல்பட்டு , #காஞ்சிபுரம் , #திருவள்ளூர் என வட மாவட்டங்களின் பல்வேறு இடங்களிலும் இன்று மாலை முதல் காற்றின் வேகம் அதிகரித்து இருக்கும்.காற்றின் வேகம் தொடர்பான விரிவான பதிவு இன்று பிற்பகலில் பதிவிடப்படும்.
வானிலை ஆய்வு மையம் மற்றும் அந்தந்த மாநில அரசுகள் சொல்லும் வழி முறைகளை பின்பற்றி முன் எச்சரிக்கையுடன் இருங்கள்.
மீண்டும் புயலின் நிலவரத்தை பிற்பகலில் பதிவிடுகிறேன்.
#நிவர் புயல் எங்கு கரையை கடக்கலாம்? 👉 - https://youtu.be/IMbusLFuGek
காற்றின் வேகம் எங்கெங்கு அதிகமாக இருக்கும் ? - https://youtu.be/IMbusLFuGek
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
==================
சென்னை , நுங்கம்பாக்கம் AWS (சென்னை மாநகர்) - 166 மி.மீ
நுங்கம்பாக்கம் (சென்னை மாநகர்) - 162 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் ARG ' சைதாப்பேட்டை (சென்னை மாநகர்) - 149 மி.மீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை மாநகர்) - 148 மி.மீ
மீனம்பாக்கம், சென்னை விமான நிலையம் (சென்னை மாநகர்) - 147 மி.மீ
சோழிங்கநல்லூர் (சென்னை மாநகர்) - 145 மி.மீ
தரமணி (சென்னை மாநகர்) - 144 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை மாநகர்) - 143 மி.மீ
DGP அலுவலகம் , மயிலாப்பூர் (சென்னை மாநகர்) - 141 மி.மீ
எம்.ஜி.ஆர் நகர் (சென்னை மாநகர்) - 136 மி.மீ
மீனம்பாக்கம் AWS (சென்னை மாநகர்) - 126 மி.மீ
மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 125 மி.மீ
மாமல்லபுரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 121 மி.மீ
ஆலந்தூர் (சென்னை மாநகர்) - 120 மி.மீ
ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 118 மி.மீ
செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம் மாவட்டம்) - 116 மி.மீ
தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 115 மி.மீ
தண்டையார்பேட்டை (சென்னை மாநகர்) - 113 மி.மீ
அம்பத்தூர் (சென்னை மாநகர்) - 110 மி.மீ
புழல் ARG (திருவள்ளூர் மாவட்டம்) - 109 மி.மீ
அயனாவரம் (சென்னை மாநகர்) - 105 மி.மீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை மாநகர்) - 104 மி.மீ
செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 101 மி.மீ
செங்குன்றம் (திருவள்ளூர் மாவட்டம்) - 100 மி.மீ
பல்லாவரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 98 மி.மீ
பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம்) - 97 மி.மீ
எண்ணூர் AWS (சென்னை மாநகர்) - 93 மி.மீ
திருப்போரூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 92 மி.மீ
சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம்) - 87 மி.மீ
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 79 மி.மீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 79 மி.மீ
ஸ்ரீபெரும்பத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 66 மி.மீ
செங்கல்பட்டு (செங்கல்பட்டு மாவட்டம்) - 64 மி.மீ
கொரட்டூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 58 மி.மீ
திருக்கழுக்குன்றம் (சென்னை மாநகர்) - 54 மி.மீ
செய்யூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 50 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
அனைத்து பகுதிகளின் நிலவரம் அடங்கிய முழுமையான மழை அளவுகள் பட்டியல் இன்னும் சற்று நேரத்தில் நமது இணையதளமான www.tamilnaduweather.com இல் பதிவேற்றம் செய்யப்படும்.