24-11-2020 நேரம் காலை 10:00 மணி நேற்றைய இரவு நேர குரல் பதிவில் நான் குறிப்பிட்டு கூறியிருந்ததை போல #நிவர் (#Cyclone_nivar) புயல் வங்கக்கடல் பகுதியில் உருவானதாக அதிகாரபூர்வ அறிக்கையும் வெளியாகிவிட்டது. வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் அது #புதுச்சேரி க்கு 410 கி.மீ கிழக்கு - தென்கிழக்கு திசையிலும் #சென்னை க்கு 450 கி.மீ தென் கிழக்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைக்கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.மேலும் அந்த அறிக்கையில் நிவர் புயல் 25-11-2020 ஆம் தேதி ஆகிய நாளை #காரைக்கால் - #மாமல்லபுரம் இடையே #புதுச்சேரி அருகே கரையை கடக்க வாய்ப்புகள் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சில நிமிடங்களுக்கு முன்பாக அதனை நான் தனிப்பட்ட முறையில் தனியார் ஆய்வு நிறுவனங்களின் உதவியுடன் Track செய்த பொழுது அதனுடைய அதிகபட்ச சுழற்சியின் வேகம் (#Maximum_sustained_wind_speed) மணிக்கு 41 knots களாக இருந்தது.அது மென்மேலும் தீவிரமடைந்து வருவதை இது உறுதிப்படுத்துகிறது.அடுத்த சில மணி நேரங்களில் இன்று அது ஒரு #தீவிர_புயலாக உருவெடுத்தாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும்.என்னை பொறுத்தவரையில் நான் முன்பே தெரிவித்து இருந்தது போல அது #கடலூர் - #சென்னை இடையே கரையை கடக்க முற்படும் பட்சத்தில் அது #மிக_தீவிர_புயலாக உருவெடுத்தாலும் ஆச்சரியம் கொள்வதற்கு இல்லை.எதுவாயினும் அது கரையை கடக்க போகும் நாள் 25-11-2020 தான்.
#புதுச்சேரி , #கடலூர் , #சென்னை உட்பட வடகடலோர மாவட்ட மக்கள் முன் எச்சரிக்கையுடன் இருங்கள்.நான் எத்தனை முறை பதிவிட்டாலும் நீங்கள் மாதிரிகளை பார்த்து ஒவ்வொரு முறையும் கேள்விகேட்க தான் போகிறீர்கள்.மாதிரிகளின் ஓட்டம் மேலும் மாறும் இன்றைய பிற்பகல் நேர ஓட்டத்தில் எங்கு கரையை கடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது உங்களுக்கே தெரியவந்துவிடும்.அதன் பின்னர் அதில் எந்தெந்த மாற்றங்கள் இருக்கும் என்பதை நான் விரிவாக பதிவிடுகிறேன்.
#புதுவை மாநிலத்தை பொறுத்தவரையில் #புதுச்சேரி மற்றும் #காரைக்கால் பகுதியில் தலா 3 மி.மீ அளவு மழை காலை 8:30 மணி வரையில் பதிவாகி உள்ளது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
======================
தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 90 மி.மீ
எம்.ஜி.ஆர் நகர் (சென்னை மாநகர்) - 83 மி.மீ
நுங்கம்பாக்கம் (சென்னை மாநகர்) - 77 மி.மீ
மீனம்பாக்கம், சென்னை விமான நிலையம் (சென்னை மாநகர்) - 71 மி.மீ
ஆலந்தூர் (சென்னை மாநகர்) - 70 மி.மீ
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 58 மி.மீ
பல்லாவரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 55 மி.மீ
அயனாவரம் NEW தாலுக்கா அலுவலகம் (சென்னை மாநகர்) - 52 மி.மீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை மாநகர்) - 51 மி.மீ
பெரம்பூர் (சென்னை மாநகர்) - 40 மி.மீ
ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 39 மி.மீ
தர்காஸ் , மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 37 மி.மீ
செங்கல்பட்டு (செங்கல்பட்டு மாவட்டம்) - 35 மி.மீ
தரமணி (சென்னை மாநகர்) - 35 மி.மீ
தண்டையார்பேட்டை (சென்னை மாநகர்) - 34 மி.மீ
பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம்) - 30 மி.மீ
செங்குன்றம் (திருவள்ளூர் மாவட்டம்) - 28 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை மாநகர்) - 28 மி.மீ
அம்பத்தூர் (சென்னை மாநகர்) - 26 மி.மீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 24 மி.மீ
கொரட்டூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 24 மி.மீ
புழல் ARG (திருவள்ளூர் மாவட்டம்) - 24 மி.மீ
சைதாப்பேட்டை (சென்னை மாநகர்) - 23 மி.மீ
DGP அலுவலகம் , மயிலாப்பூர் (சென்னை மாநகர்) - 23 மி.மீ
செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 19 மி.மீ
எண்ணூர் AWS (சென்னை மாநகர்) - 19 மி.மீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 18 மி.மீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 16 மி.மீ
ஸ்ரீபெரும்பத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 13 மி.மீ
திருப்போரூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 13 மி.மீ
நாகப்பட்டினம் (நாகை மாவட்டம்) - 13 மி.மீ
சோழிங்கநல்லூர் (சென்னை மாநகர்) - 12 மி.மீ
திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 11 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
10 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிகவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.