06-10-2020 நேரம் காலை 10:00 மணி வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைக்கொண்டு இருக்கும் வலுக்குறைந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேலும் வலுக்குறைந்து மேற்கு நோக்கி அடுத்து வரக்கூடிய நாட்களில் நகர இருக்கிறது.
நான் முன்பே பதிவிட்டு இருந்தது போல தற்சமயம் #வியட்நாம் நாட்டினை ஒட்டிய மேற்கு பசிபிக் கடல் பகுதிகளில் நிலைக்கொண்டு இருக்கும் குறைந்த காற்றழுத்தத்தின் வலுவான அலைவுகளால் 09-10-2020 ஆம் தேதி வாக்கில் அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம்.
முன்னதாக நான் இந்த பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்டு இருந்தது போல வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைக்கொண்டு இருந்த #குறைந்த_காற்றழுத்த_தாழ்வு யானது வலுக்குறைய தொடங்க இருப்பதால் மேற்கு திசை காற்றின் வீரியம் தமிழக உள் மாவட்டங்களில் குறைந்து காணப்படுகிறது அப்பகுதிகளின் பல்வேறு அடுக்குகளிலும் காற்று நிலையற்ற தன்மை ஏற்பட உள்ளது.இது வெப்பசலன மழைக்கு மிக சாதகமான சூழல் ஆகும்.
9 ஆம் தேதி வாக்கில் உருவாக இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வட மேற்கு திசையில் நகர்ந்து வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடையும் வரையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பசலன மழை வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளது.
இன்று அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மாவட்டங்களில் வெப்பசலன மழை சற்று அதிகரிக்க தொடங்கலாம்.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் விரிவாக பதிவிடுகிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=======================
கோடநாடு (நீலகிரி மாவட்டம்) - 29 மி.மீ
கீழ் கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
நாட்ராம்பள்ளி (திருப்பத்தூர் மாவட்டம்) - 4 மி.மீ
ஏரையூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 4 மி.மீ
அரியலூர் (அரியலூர் மாவட்டம்) - 3 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
கீழ்பழூவூர் (அரியலூர் மாவட்டம்) - 1 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com