15-10-2020 நேரம் காலை 10:20 மணி நான் நமது முந்தைய பதிவுகளின் தெரிவித்து இருந்ததை போல 16-10-2020 ஆகிய நாளை முதல் தமிழக உள் மாவட்டங்களில் ஆங்காங்கே மீண்டும் வெப்பசலன மழை பதிவாக தொடங்கலாம்.
மேலும் நேற்றைய குரல் பதிவில் நாம் எதிர்பார்த்து இருந்ததை போலவே தற்சமயம் தெற்கு மஹாராஷ்டிர மாநில பகுதிகளில் அந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி (#Well_marked_low_pressure_area) நிலைக்கொண்டு இருப்பதை காண முடிகிறது.மேலும் மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை அது அரபிக்கடல் பகுதிகளை அடைந்து விடும்.
கடந்த 24 மணி நேர தமிழக மழை நிலவரம்
=========================
இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 52 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 51 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 41 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 41 மி.மீ
குளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 36 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 34 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 34 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 32 மி.மீ
பாபநாசம் அணை ( நெல்லை மாவட்டம்) - 28 மி.மீ
தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம்) - 28 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 27 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 26 மி.மீ
பேச்சிப்பாரை (கன்னியாகுமரி மாவட்டம்) - 26 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 25 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 24 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 22 மி.மீ
கன்னிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 20 மி.மீ
குளித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 19 மி.மீ
செங்கோட்டை (தென்காசி மாவட்டம்) - 18 மி.மீ
தென்காசி (தென்காசி மாவட்டம்) - 16 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 16 மி.மீ
நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம்) - 15 மி.மீ
மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம்) - 13 மி.மீ
ராதாபுரம் (நெல்லை மாவட்டம்) - 13 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 12 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 10 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
10 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
