இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 14 அக்டோபர், 2020

14.10.2020 Today's weather forecast | Last 24 hours complete rainfall data of tamilnadu and puducherry

0
14-10-2020 நேரம் காலை 10:10 மணி கடந்த 24 மணி நேரத்தில் நாம் எதிர்ப்பார்த்து இருந்தது போல தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே சிறப்பான மழை பதிவாகியிருப்பதை அறிய முடிகிறது குறிப்பாக #கன்னியாகுமரி மாவட்டம் #சுரளக்கோடு சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 82 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.

தற்சமயம் அந்த #குறைந்த_காற்றழுத்த_தாழ்வு_மண்டலம் (#Depression) ஆனது தெலுங்கானா மாநிலத்தின் மேற்கு பகுதிகளில் நிலைக்கொண்டு மழை பொழிவை ஏற்படுத்தி வருகிறது இன்று அடுத்த 24 மணி நேரத்தில் #மஹாராஷ்டிர மாநில மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் ஆங்காங்கே சிறப்பான மழை பதிவாகலாம்.#ஹைதராபாத் விமான நிலையத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 192 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது மேலும் அம்மாநிலத்தில் பதிவாகிய மழை அளவுகள் ஒவ்வொன்றாக எனக்கு கிடைக்கப்பெற்று வருகிறது பின்னர் அவற்றை பதிவிடுகிறேன்.

தமிழகத்தை பொறுத்தவரையில் இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்ட மேற்கு தொடற்ச்சி மலை பகுதிகள் உட்பட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாகலாம்.தமிழகத்தின் பிற பகுதிகளை பொறுத்தவரையில் வெப்பசலன மழை குறைந்து காணப்படும்.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.16-10-2020 அல்லது 17-10-2020 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் வெப்பசலன மழை மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கலாம்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
==========================
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 82 மி.மீ
நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம்) - 66 மி.மீ
பாபநாசம் (நெல்லை மாவட்டம்) - 64 மி.மீ
மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம்) - 63 மி.மீ
கன்னிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 60 மி.மீ
பேச்சிப்பாரை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 60 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 57 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 55 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 52 மி.மீ
இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 49 மி.மீ
குளித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 49 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 48 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 46 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 43 மி.மீ
தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம்) - 42 மி.மீ
குளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 32 மி.மீ
தென்காசி (தென்காசி மாவட்டம்) - 31 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 25 மி.மீ
கன்னியாகுமரி (கண்ணியகுமரி மாவட்டம்) - 22 மி.மீ
களியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 19 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 19 மி.மீ
வால்பாறை தாலுக்க அலுவலகம் (கோவை மாவட்டம்) - 18 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 18 மி.மீ
மணிமுத்தாறு அணை (நெல்லை மாவட்டம்) - 17 மி.மீ
கொட்டாரம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 16 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 15 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 15 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 14 மி.மீ
மயிலாப்பூர் (சென்னை மாநகர்) - 13 மி.மீ
செங்கோட்டை (தென்காசி மாவட்டம்) - 11 மி.மீ
ராதாபுரம் (நெல்லை மாவட்டம்) - 10 மி.மீ
ஆயிக்குடி (தென்காசி மாவட்டம்) - 10 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com

10 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக