வடகிழக்கு பருவமழை 2020 எப்போது தொடங்கலாம் ?
================
18-10-2020 நேரம் இரவு 8:10 மணி தற்போது #மேடன்_ஜூலியன்_அலைவு (#Madden_julian_Oscillation) அதன் 5 வது கட்டத்தில் (Phase 5) ஒன்றுக்கும் அதிகமான வீச்சு அளவுடன் மிக வலுவாக உள்ளது இதனுடைய தாக்கத்தால் தென் சீன கடல் பகுதிகளில் அடுத்தடுத்து வலுவான குறைந்த காற்றழுத்தங்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றன.அதனுடைய தாக்கத்தால் நம்முடைய அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளிலும் அடுத்தடுத்து குறைந்த காற்றழுத்தங்கள் உருவாகி ஆந்திராவை நோக்கி நகர்ந்து தென்மேற்கு பருவமழை விலகுவதை தாமதப்படுத்தி வருகின்றன.
அடுத்து வரக்கூடிய 4 அல்லது 5 நாட்களில் #MJO அதனுடைய 6 வது கட்டத்தை வலுவுடன் அடையலாம் அதன் பின்னர் இந்த மாத இறுதி வாரத்தில் அது அதனுடைய 7 வது கட்டத்தை அடைந்து அதன் பின்னர் 1 க்கும் குறைவான வீச்சு அளவை (#Amplitude less than 1) அதன் பின்னர் அடையலாம்.இதனால் #North_easterly_Surge மற்றும் #Easterly_trade_winds இன் தாக்கம் பூமத்திய ரேகை அருகே இருக்கும் மேற்கு பசிபிக் கடல் பகுதிகளில் அதிகரிக்க தொடங்கும்.
இந்த மாத இறுதி வாரத்தில் தென்சீன மற்றும் மேற்கு பசிபிக் கடல் பகுதிகளில் சூழல்கள் மாற தொடங்கிவிடும் அதே சமயம் இந்த மாத இறுதியில் குறிப்பாக 28-10-2020 அல்லது அடுத்து வரக்கூடிய நாட்களில் வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உயர் அழுத்தம் (850 Hpa) கீழடுக்கில் உருவாக வாய்ப்புகள் உண்டு.வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு இந்த சூழல்கள் மிக முக்கியம் என்றே சொல்லலாம்.

நமக்கு பெரும்பாலும் இந்த மாத இறுதி நாட்களில் கீழடுக்கில் (#Surface_level) இல் கிழக்கு திசை காற்று கிடைத்து விடும்.
ஆகையால் இந்த மாத இறுதி நாட்கள் அல்லது நவம்பர் மாத தொடக்க நாட்களில் ஏதேனும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வெளியாகலாம்.அக்டோபர் 28 - நவம்பர் 3 இதற்கு இடையிலான ஏதேனும் ஒரு நாளில் அறிவுப்பகள் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது.
அதுவரையில் அங்கும் இங்குமாக பதிவாகி வரும் வெப்பசலன மழையை அனுபவியுங்கள் தோழர்களே.
நவம்பர் மாதத்தில் #MJO நம்முடைய இந்திய பெருங்கடல் பகுதிகளுக்கு (#Indian_ocean_basin) அதாவது Phase 2 மற்றும் 3 க்கு வரும் பொழுது வட கடலோர மாவட்டங்கள் உட்பட கடலோர மாவட்டங்களில் சிறப்பான வடகிழக்கு பருவமழை பதிவாகலாம்.
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com