12-09-2020 நேரம் காலை 10:20 மணி நாம் முன்பு எதிர்பார்த்து இருந்தது போல ஆந்திராவை ஒட்டிய மேற்கு மத்திய #வங்கக்கடல் பகுதியில் நாளை ஒரு #குறைந்த_காற்றழுத்த_தாழ்வு_பகுதி உருவாகலாம்.தமிழகத்தை பொறுத்தவரையில் இன்றைய அடுத்த 24 மணி நேரத்தில் நேற்றைய சுழல்களே தொடரும் அங்கும் இங்குமாக சில இடங்களில் மழை பதிவாகலாம் மேற்கு தொடற்சி மலை பகுதிகளின் பல்வேறு இடங்களிலும் மழை பதிவாகலாம்.பொதுவாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய ஆந்திர கடலோர பகுதிகளின் அருகே உருவாகுகையில் அது காற்றை மேற்கில் இருந்து தம்வசம் வேகமாக இழுக்க முற்படும் , இதன் காரணமாக தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய திருவள்ளுர் மாவட்ட வடக்கு பகுதிகளில் மழை வாய்ப்புகளை உருவாக்கும் #சென்னை மாநகருக்கும் இது சாதகமான சூழல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.இதனை அடிப்படையாக கொண்டே அடுத்து வரக்கூடிய வார வானிலையில் #சென்னை மாநகரில் 12-09-2020 அல்லது 13-09-2020 ஆம் தேதிகளில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு என்று குறிப்பிட்டு இருந்தேன் தற்போது அதனை மீண்டும் ஒரு முறை உறுதிசெய்கிறேன். இன்று முதல் அடுத்து வரக்கூடிய 2 நாட்கள் #சென்னை மாநகரின் மழைக்கு சாதகமான சூழல் என்றே சொல்லலாம் ஆந்திராவின் தெற்கு பகுதிகளில் உருவாகும் மழை மேகங்கள் #KTC க்கு பலன் வழங்கலாம்.#சென்னை அதனது #Geographical_advantage ஐ கொண்டு இம்முறையேனும் பலன் அடைகிறதா என்பதனை பொறுத்து இருந்து பார்ப்போம்.
அடுத்து 24 மணி நேர விரிவான வானிலையை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் பதிவிடுகிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
======================
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 64 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 53 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 37 மி.மீ
கிளன் மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 37 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 33 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 32 மி.மீ
பந்தலூர் (நீலகிரி மாவட்டம்) - 23 மி.மீ
பாடந்துரை (நீலகிரி மாவட்டம்) - 23 மி.மீ
செருமுள்ளி (நீலகிரி மாவட்டம்) - 22 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 22 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 20 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 20 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 20 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 19 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 19 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 18 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 16 மி.மீ
இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 12 மி.மீ
பேச்சிப்பாரை (கன்னியாகுமரி மாவட்டம்) - 10 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 10 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 10 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 10 மி.மீ
தக்களை (கன்னியாகுமரி மாவட்டம்) - 9 மி.மீ
திருப்பதிசாரம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 9 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 8 மி.மீ
இழுப்பூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 8 மி.மீ
நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம்) - 8 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 7 மி.மீ
கொட்டாரம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 7 மி.மீ
களியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 6 மி.மீ
குளித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 6 மி.மீ
மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம்) - 6 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 5 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.