இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

13.09.2020 Low Pressure Area Formed in Bay of Bengal | Today's weather report in tamil | Last 24 Hours Complete rainfall data of tamilnadu and Puducherry

0

13-09-2020 நேரம் பிற்பகல் 1:00 மணி நாம் எதிர்பார்த்து இருந்ததை போலவே வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் ஒரு #குறைந்த_காற்றழுத்த_தாழ்வு_பகுதி உருவானது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மேலும் தீவிரமடைந்து ஒரு தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் உருவெடுக்கலாம் இதன் காரணமாக இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு சில இடங்களில் வலுவான மழையும் பதிவாகலாம்   நேற்றை போலவே இரவு நேரங்களில் தமிழக வட மாவட்டங்களில் அங்கும் இங்குமாக மழை பதிவாகலாம்.

பாலக்காடு கணவாய் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து இருக்க வேண்டும் #தாராபுரம்  ,#அரவாக்குறிச்சி ,#உடுமலைப்பேட்டை , #பல்லடம் சுற்றுவட்டப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்தே இருக்கும் மணிக்கு அதிகபட்சமாக 60 கி.மீ வரையில் காற்று சில சமயங்களில் வேகம் எடுக்கலாம்.#திருச்சி , #கரூர் , #முசிறி சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட பல்வேறு இடங்களிலும் காற்றின் வேகம் இயல்பை விட அதிகரித்து காணப்படலாம்.

மேலும் #செங்கோட்டை வழியாக ஊடுருவும் வீரியமான மேற்கு காற்றின் காரணமாக #கயத்தாறு , #ஒட்டப்பிடாரம் , #தூத்துக்குடி , #மணியாச்சி மற்றும் #நெல்லை மாவட்டம் #கங்கைகொண்டான் உட்பட பல்வேறு இடங்களிலும் சில சமயங்களில் காற்றின் வேகம் மணிக்கு 55 கி.மீ வரையில் அதிகரிக்கலாம்.

புதுவை மாநிலத்தை பொறுத்தவரையில் #காரைக்கால் பகுதியில் 11 மி.மீ அளவு மழையும் #புதுச்சேரி பகுதியில் 1 மி.மீ அளவு மழையும் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியிருக்கிறது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
===================
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 54 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) -  52 மி.மீ
கீழ்கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 45 மி.மீ
லோயர் நீராறு (கோவை மாவட்டம்) - 40 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 38 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 38 மி.மீ
அம்முடி (வேலூர் மாவட்டம்) -  32 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 29 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம்) - 28 மி.மீ
அப்பர்பவானி (நீலகிரி மாவட்டம்) -  27 மி.மீ
காவேரிப்பாக்கம் (ராணிபேட்டை மாவட்டம்) - 24 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 23 மி.மீ
பெருவாரிபள்ளம் (கோவை மாவட்டம்) - 22 மி.மீ
தளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  20 மி.மீ
வேலூர் (வேலூர் மாவட்டம்) - 19 மி.மீ
குண்டேரிபள்ளம் (ஈரோடு மாவட்டம்) - 18 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 18 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) -  17 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 17 மி.மீ
மாமல்லபுரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 14 மி.மீ
தூணாக்கடவு (கோவை மாவட்டம்) - 14 மி.மீ
விரிஞ்சிபுரம் (வேலூர் மாவட்டம்) -  14 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) -  13 மி.மீ
திருவாரூர் தாலுக்கா அலுவலகம் (திருவாரூர் மாவட்டம்) - 12 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) -  11 மி.மீ
காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 10 மி.மீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு மாவட்டம்) -  10 மி.மீ
பவானிசாகர் அணை (ஈரோடு மாவட்டம்) -  10 மி.மீ
கலவை  (ராணிப்பேட்டை மாவட்டம்) -  9 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
வடபுதுபட்டு (திருப்பத்தூர் மாவட்டம்) -  9 மி.மீ
வாலாஜா (ராணிபேட்டை மாவட்டம்) - 8 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
ஓசூர் AWS (கிருஷ்ணகிரி மாவட்டம்) -  7 மி.மீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) -  6 மி.மீ
சோளிங்கர் (ராணிபேட்டை மாவட்டம்) - 6 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்) - 6 மி.மீ
வாலாஜாபாத் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 6 மி.மீ
கோடநாடு (நீலகிரி மாவட்டம்) -  6 மி.மீ
பொன்னை அணை (வேலூர் மாவட்டம்) - 5 மி.மீ
செய்யாறு ARG (திருவண்ணாமலை மாவட்டம்) - 5 மி.மீ
கிண்ணகோரை (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
குந்தா பாலம் (நீலகிரி மாவட்டம்) -  5 மி.மீ
மேலலாத்தூர் (வேலூர் மாவட்டம்) -  5 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com


5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக