இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 செப்டம்பர், 2020

"NOUL " Typhoon Likely to Hit Vietnam tomorrow | NOULs Impact in South West Monsoon | Last 24 Hours Complete rainfall data of Tamilnadu and Puducherry

0
17-09-2020 நேரம் காலை 11:00 மணி தற்சமயம் #NOUL சூறாவளி #வியட்நாம் நாட்டினை (#Veitnam) ஒட்டிய கடல் பகுதிகளில் நிலைக்கொண்டு உள்ளது நாளை இது #veitnam (#வியட்நாம்) நாட்டின் மத்திய கடலோர பகுதிகளில் கரையை கடக்கும் அதன் பின்னர் அது நிலப்பகுதிகளில் வளுக்குறைய தொடங்கி மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து 20-09-2020 ஆம் தேதி வாக்கில் வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு #தீவிர_காற்றழுத்த_தாழ்வு_பகுதி (#Well_marked_Low_pressure_area) என்கிற நிலையில் அடையலாம் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவெடுத்து #மேற்கு_வங்க த்தில் கரையை கடந்து இந்தியாவின் வட கிழக்கு இந்திய பகுதிகளில் மழை பொழிவை ஏற்படுத்தலாம்.(Refer Picture No.2)

வட மேற்கு இந்தியாவில் ராஜஸ்தான் பகுதிகளில் மத்திய அடுக்கில் ஒரு #சூறாவளி_எதிர்ப்பு_சுழற்சி (#Anticyclone) உருவாக தொடங்கி இருப்பதை காண முடிகிறது இனி வரக்கூடிய நாட்களில் #பஞ்சாப் , #ஹரியானா , #ராஜஸ்தான் மாநிலங்களுக்கு பருவமழை எந்த வகையிலும் பலன் வழங்க போவது கிடையாது.ஒவ்வொரு ஆண்டும் பருவமழை விலகல் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுகையில் இந்தியாவின் வட மேற்கு பகுதிகளில் சூறாவளி_எதிர்ப்பு_சுழற்சி (#Anticyclone) உருவாகி இருக்க வேண்டியதும் அவசியம் (Refer Picture no.1)

Noul Typhoon and Indian Southwest Monsoon
===============================
தற்சமயம் தென் சீன கடலில் இருந்து படையெடுத்து வரவிறுக்கும் அந்த #Noul சூறாவளி யின் வலு குறைந்த பகுதிக்காக தான் நாம் காத்திருக்கிறோம் அது இந்தியாவை அடைந்து நாட்டின் வட கிழக்கு பகுதிகளில் இருந்து வட மேற்கு பகுதிகளை நோக்கி நகர முற்படுகையில் முற்றிலும் வலுவிழந்து போகும்.அதன் பின்னர் தென்மேற்கு பருவமழை விலகல் (#Southwest_Monsoon_Withdrawal) இந்தியாவின் வட மேற்கு பகுதிகளில் உறுதி செய்யப்படும்.

அடுத்த 24 மணி நேர தமிழக வானிலை
======================
நேற்றை போலவே இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மாவட்டங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாகும் தெற்கு ஆந்திரம் மற்றும் தமிழக வட மாவட்டங்களிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
========================
பந்தலூர் (நீலகிரி மாவட்டம்) -  21 மி.மீ
நாமக்கல் (நாமக்கல் மாவட்டம்) - 20 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 20 மி.மீ சென்னை விமான நிலையம் , மீனம்பாக்கம் AWS (சென்னை மாநகர்) -  20 மி.மீ
ஆலந்தூர் (சென்னை மாநகர்) -  20 மி.மீ
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர் மாவட்டம்) - 18 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) -  18 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 17 மி.மீ
அப்பர் நீராறு (கோவை மாவட்டம்) -  17 மி.மீ
செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்) -  16 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
கோளப்பாக்கம் , பல்லாவரம் (சென்னை மாநகர்) - 14 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 14 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) -  14 மி.மீ
அரக்கோணம் (ராணிபேட்டை மாவட்டம்) -  13 மி.மீ
இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 13 மி.மீ
திருப்பூர் தெற்கு (திருப்பூர் மாவட்டம்) - 13 மி.மீ
பொன்னை அணை (வேலூர் மாவட்டம்) -  13 மி.மீ
சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) -  12 மி.மீ
கடலடி (ராமநாதபுரம் மாவட்டம் ) - 12 மி.மீ
நாமக்கல் (நாமக்கல் மாவட்டம்) - 12 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 11 மி.மீ
தரமணி  (சென்னை மாநகர்) - 11 மி.மீ
பொள்ளாச்சி (கோவை மாவட்டம்) - 11 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் , சைதாப்பேட்டை (சென்னை மாநகர்) - 11 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) -  11 மி.மீ
ஸ்ரீபெரம்பத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) -  10 மி.மீ
எடப்பாடி (சேலம் மாவட்டம்) -  10 மி.மீ
செந்துறை (அரியலூர் மாவட்டம்) - 10 மி.மீ
திருப்பூர் வடக்கு (திருப்பூர் மாவட்டம்) - 10 மி.மீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி மாவட்டம்) - 9 மி.மீ
அவிநாசி (திருப்பூர் மாவட்டம்) - 9 மி.மீ
சோளிங்கர் (ராணிபேட்டை மாவட்டம்) - 9 மி.மீ
ஆர்.கே.பேட் (திருவள்ளூர் மாவட்டம்) -  9 மி.மீ
மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம்) -  8 மி.மீ
நாகர்கோவில் ARG (கன்னியாகுமரி மாவட்டம்) -  8 மி.மீ
குளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 7 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) -  7 மி.மீ
கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம்) -  7 மி.மீ
மயிலாப்பூர் (சென்னை மாவட்டம்) -  7 மி.மீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை மாநகர்) - 7 மி.மீ
அண்ணாமலை நகர் , சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) -  6 மி.மீ
தரங்கம்பாடி (மயிலாடுதுறை மாவட்டம்) - 6 மி.மீ
கொட்டாரம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 6 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -  6 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
ஜெயங்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) - 5 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 5 மி.மீ
பர்லியார் (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
செருமுள்ளி (நீலகிரி மாவட்டம்) -  5 மி.மீ
குளித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) -  5 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com

5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக