2020 ஆம் ஆண்டின் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கலாம் ?
====================
16-09-2020 நேரம் மாலை 4:00 மணி வட கிழக்கு பருவமழை தொடர்பான எனது கணிப்புகளை பார்ப்பதற்கு முன் அதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சில வானிலை கூறுகளின் தற்போதைய நிலவரத்தையும் பார்த்துவிடலாம்.
எல்நினோ தெற்கு அலைவு - #Elnino_southern_oscillation (#ENSO)
=========================
தற்சமயம் பசிபிக் கடல் பரப்பில் நினோ 3.4 பகுதியில் அதாவது மத்திய பகுதியில் இயல்பை விட வெப்பநிலை குறைந்து காணப்படுகிறது சமீபத்திய தகவல்களின் படி அப்பகுதியில் இயல்புடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 1°C செல்ஸியஸ்க்கும் குறைவான அளவு வெப்பநிலையே தொடர்ந்து நிலவி வருகிறது அடுத்து வரக்கூடிய நாட்களிலும் இதே சுழல்களே தொடர அதிக வாய்ப்புகள் உள்ளது இதே போல நினோ 3 மற்றும் நினோ 1+2 பகுதிகளிலும் இயல்பை விட 1°C செல்ஸியஸ்க்கும் குறைந்த அளவிலான வெப்பநிலையே நிலவி வருகின்றன.இவைகளெல்லாம் தற்சமயம் "#லாநினா (#LANINA) "வுக்கான சூழல்கள் நிலவி வருகிறது என்பதனை உறுதிப்படுத்துகின்றன.நிகழும் இந்த 2020 ஆம் ஆண்டு நமது #வடகிழக்கு_ பருவமழை காலகட்டத்தில் பசிபிக் கடல் பரப்பில் "#லாநினா (#LANINA) "வுக்கான சூழல்கள் தொடரலாம்.
நினோ 3, நினோ 4 , நினோ 1+2 பகுதிகள் என்றால் என்ன என்பதனை அறிய நான் இந்த பதிவுடன் இணைத்திருக்கும் 3 வது (Refer Picture No.3) படத்தை காணுங்கள்.
உங்களுக்கு "#எல்நினோ_ தெற்கு_ அலைவு - #Elnino_southern_oscillation (#ENSO) " என்றால் என்ன ? அதற்கும் நமது இந்திய பருவமழைக்கும் என்ன தொடர்பு ? என்பதனை விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றினால் - https://youtu.be/FXYFmz2tjhY இந்த இணைப்பில் காணவும்.
இப்பொழுது நான் இந்த பதிவுடன் இணைத்திருக்கும் இரண்டாவது படத்தை காணுங்கள் (Refer Picture No.2) அதில் 2006 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் #பசிபிக்_கடல்_பரப்பில் நிலவி வந்த சூழல்களும் அந்தந்த ஆண்டுகளில் நமது வடகிழக்கு பருவமழையில் எந்த அளவு மழை கிடைத்ததுள்ளது என்பதனைப் போன்ற தகவல்களையும் பட்டியலுடன் வழங்கி இருக்கிறேன்.அதனை பார்த்துவிட்டு #லாநினா சூழல்கள் வடகிழக்கு பருவமழையில் எந்த வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனை காண - https://youtu.be/WSNweX0zeqU அந்த காணொளியை முழுமையாக கேட்டீர்கள் என்றால் நான் அடுத்து சொல்ல இருக்கும் விஷயங்கள் உங்களுக்கு தெளிவாக புரிய வரும்.
Indian Ocean Dipole (#IOD)
==================
#Indian_Ocean_dipole என்பது மேற்கு மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளுக்கு இடையே நிலவும் வெப்பநிலை வேறுபாடுகளை அடிப்படையாக கொண்டு மூன்று விதமான சூழல்களாக வகைப்படுத்தப்படும்.அவைகளை #Negative_Iod , #Positive_Iod and #Neutral_Iod என நிலவும் சூழல்களுக்கு ஏற்ப வழங்குவர்.உங்களுக்கு இது தொடர்பான விரிவான தகவல்களை அறிய வேண்டும் என்றால் - https://youtu.be/KeJbJM1aHaQ நான் பதிவு செய்து இருக்கும் அந்த காணொளியின் இணைப்பு வழியாக தெரிந்துக் கொள்ளலாம்.அது தெரிந்தால் தான் இப்பொழுது நான் சொல்லவரும் தகவல்களும் உங்களுக்கு புரியும்.
தற்பொழுது இந்திய பெருங்கடலில் #Neutral_Iod கக்கான சூழல்கள் நிலவி வந்தாலும் அடுத்து வரக்கூடிய மாதத்தில் #Indian_Ocean_dipole அதனுடைய #Negative_Phase ஐ அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.ஆம் , பூமத்திய ரேகை அருகே இருக்கும் மேற்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து குறைந்து வருவதை கடந்த சில நாட்களாக காண முடிகிறது.பருவமழையின் மத்தியில் அது மீண்டும் #Neutral_Phase ஐ அடையலாம்.பொதுவாக IOD இன் #Positive_Phase வடகிழக்கு திசை வர்த்தக காற்று தமிழகத்தினுள் ஊடுருவ சாதகமானதாக இருக்கும்.
#மேடன்_ ஜூலியன்_ அலைவு (#Madden_Julian_Oscillation)
=========================================
#Madden_Julian_Oscillation (#MJO) என்பது மற்ற இரண்டு கூறுகளில் இருந்து வித்தியாசமானது இது 30 முதல் 90 நாட்களில் கிழக்கு நோக்கியே அதாவது கிழக்கு திசையில் பயணம்செய்து உலகை சுற்றி வரும் ஒரு கடல் சார் அலைவு என்று இதனை வழங்கலாம் மேலும் இதனை காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய கூறு என்றும் கூட குறிப்பிடலாம்.அவை கடல் பகுதிகளில் எந்தெந்த இடங்களில் இருக்கின்றன என்பதனை அடிப்படையாகாக் கொண்டு அதனை 8 Phase களாக பிரிக்கிறார்கள் அதில் 2 மற்றும் 3 ஆம் Phase கள் அவை நமது இந்திய பெருங்கடலில் இருப்பதை குறிக்கின்றன உங்களுக்கு இதில் சந்தேகம் இருப்பின் நான் இந்த பதிவுடன் இணைத்திருக்கும் 4 வது படத்தை (Refer Picture No.4) காணுங்கள்.மேலும் #MJO அதன் 4 மற்றும் 5வது கட்டத்தில் இருக்கும் பொழுது கூட வங்கக்கடல் பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
#Madden_Julian_Oscillation (#MJO) எப்பொழுது எல்லாம் இந்திய பெருங்கடல் Phase க்கு வருகிறதோ அப்பொழுது எல்லாம் நமக்கு வடகிழக்கு பருவமழையில் முன்னேற்றம் ஏற்படும்.மொத்தத்தில் #மேடன்_ ஜூலியன்_ அலைவு (#Madden_Julian_Oscillation) நமக்கு சாதகமாக இல்லையென்றால் வடகிழக்கு பருவமழை தொய்வு காணும் மேலும் #குறைந்த_ காற்றழுத்தங்கள் மென்மேலும் தீவிரமடைய #MJO உறுதுணையாக இருக்கும்.
#Madden_Julian_Oscillation (#MJO) தொடர்பான அடிப்படை தகவல்களை விரைவாக அறிய - https://youtu.be/ZxW3rkikl3o
நான் தற்பொழுது நிலவி வரும் வானிலை சூழல்கள் மற்றும் முக்கிய கூறுகளின் தற்போதைய நிலவரம் உட்பட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டே எனது கணிப்புகளை வெளியிடுகிறேன்.
எனது கணிப்பு
===============
கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டு இருக்கப்போவது கிடையாது வடகிழக்கு திசை காற்றின் தாக்கத்தால் மட்டுமே நம்மால் தன்னிகர் அடைந்து விட இயலாது.நிகழும் 2020 ஆம் ஆண்டின் வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் பதிவாக இருக்கும் மழை அளவுகளை நிர்ணயம் செய்ய இருப்பது #குறைந்த_காற்றழுத்தங்கள் மற்றும் புயல்கள் மட்டுமே.அதிர்ஷ்டவசமாக தற்பொழுது நிலவி வரும் வானிலை சூழல்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில் இந்த ஆண்டு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வட கிழக்கு பருவமழை காலகட்டத்தில் அதிக #குறைந்த_காற்றழுத்தங்கள் வங்கக்கடல் பகுதிகளில் உருவாக ஏதுவான சூழல்கள் இருப்பதையே எடுத்துரைக்கின்றன.
இவ்வளவு நாட்களாக நிலவி வந்த சூழல்கள் தற்பொழுது இல்லை "#Lanina" வுக்கான சூழல்கள் நிலவி வரும் தற்போதைய வேளையில் இது தென் மேற்கு பருவமழையின் தீவிரம் குறைவதை தாமதப்படுத்த வாய்ப்புகள் இருப்பதாகவே நான் கருதுகிறேன் ஆகவே இந்த ஆண்டு இயல்புக்கும் தாமதமாக வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புகள் உண்டு.தாமதமாக பருவமழை தொடங்க வாய்ப்புகள் இருப்பதால் பருவமழை பொய்த்துப்போய்விடும் என்று அர்த்தமில்லை.
வடகிழக்கு பருவமழையின் போக்கை தீர்மானிப்பதில் இந்த ஆண்டும் #நவம்பர் மாதத்துக்கு முக்கிய பங்கு உண்டு.
இறுதியாக இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையில் இயல்பான அளவு மழையை எதிர்பார்க்கலாமா என்று கேட்டால் ? நான் முன்னரே கூறியிருந்ததை போன்று #குறைந்த_காற்றழுத்தங்கள் ,#புயல்கள் கைகொடுக்காத பட்சத்தில் நாம் இயல்பான அளவு மழையை கூட எதிரிபார்க்க முடியாது அதே சமயம் #குறைந்த_காற்றழுத்தங்கள் ,#புயல்கள் நமக்கு கைக்கொடுக்கும் பட்சத்தில் இயல்பு அல்ல இயல்புக்கும் அதிகமான அளவு மழையை கூட எதிர்பார்க்கலாம் என்பதே எனது கருத்து.
"இயற்கை அதற்கென ஒரு தனிப்பாதையை வகுத்து அதில் பயணித்து வருகிறது.நாம் அதனை ஆர்ப்பாட்டம் இல்லாமல் பொறுமையாக பின் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பாகவே அதன் பாதையை கணிக்கலாம் ஆனால் கட்டுப்படுத்த இயலாது " எனது இத்தனை ஆண்டு கால வானிலை ஆராய்வுகளில் நான் கற்றுக்கொண்டது இதனை தான்.
வேண்டுகோள் : வட கிழக்கு பருவமழை காலகட்டம் வந்துவிட்டாலே போதும் மழை வருகிறதோ இல்லையோ வதந்திகள் வந்து கொண்டே தான் இருக்கும்.இணையத்தில் வெளியாகி வரும் ஆதாரமற்ற வீண் வதந்திகளை நம்பவும் செய்யாதீர்கள் அதனை பரப்பவும் செய்யாதீர்கள்.
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com