இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

சென்னையில் மீண்டும் மழை எப்பொழுது | அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம் | தமிழக வானிலை

0
அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம்?

05-09-2020 நேரம் இரவு 9:45 மணி அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தமிழக உள் மாவட்டங்களில் அங்கும் இங்குமாக வெப்பசலன மழை தொடரும்.தற்சமயம் அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக உள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாகி வருகிறது 06-09-2020 ஆகிய நாளையும் தமிழக உள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் சிறப்பான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.சற்று முன்னர் இன்று மாலை நான் அந்த மேலடுக்கு சுழற்சியை Track செய்து கொண்டு இருந்த பொழுது அதன் அதிக பட்ச சுழற்சியின் வேகம் கிட்டத்தட்ட 15 Knots என்கிற அளவில் இருந்தது அதன்படி அது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுக்கவில்லை என்பதனை இதன் வாயிலாக உறுதி செய்ய முடிகிறது.அதிகாலை மற்றும் அதனை ஒட்டிய காலை நேரங்களில் கடலோர மாவட்டங்களில் அங்கும் இங்குமாக சில இடங்களில் சாரல் , தூரல் அல்லது லேசான மழை பதிவாகலாம்.

அந்த மேலடுக்கு சுழற்சி வலுவிழந்த பிறகு திருவள்ளுர் ,செங்கல்பட்டு மற்றும் சென்னை மாநகரின் புறநகர் மற்றும் மாநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக ஏதுவான சூழல்கள் உருவாகும்.07-09-2020 அல்லது 08-09-2020 ஆம் தேதி முதல் #சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளிலும் அவ்வப்பொழுது இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகும் என நம்பலாம்.

செப்டம்பர் மாதம் 2 அல்லது 3 வது வாரத்தில் குறிப்பாக 10-09-2020 ஆம் தேதிக்கு பிறகு வரக்கூடிய வாரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு #குறைந்த்_காற்றழுத்த_தாழ்வு_பகுதி அல்லது ஒரு #காற்றழுத்த_தாழ்வு_மண்டலம் உருவானால் ஆச்சரியம் கொள்ளாதீர்கள்.

ஒவ்வொரு நாளும் அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் பதிவிடுகிறேன்.

வட கிழக்கு பருவமழை இயல்பான தேதிகளில் தொடங்க வாய்ப்புகள் உள்ளது.அக்டோபர் 3 வாரத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியாதாக அறிவிப்புகள் வெளியாகலாம்.

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக