இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

29.09.2020 Chidambaram , kollidam recieved above 100 mm of rainfall in the last 24 hours | Today's weather forecast

0
29-09-2020 நேரம் காலை 10:50 மணி கடந்த 24 மணி நேரத்தில் #சிதம்பரம் #அண்ணாமலை_நகர் சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 127 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது அதேபோல #சிதம்பரம் AWS இல் கிட்டத்தட்ட 125 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது மேலும் #கொள்ளிடம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கிறது.

நேற்று நாம் எதிர்பார்த்ததைபோன்றே #கடலூர் மாவட்டத்தில் குறிப்பாக தெற்கு கடலூர் மாவட்ட பகுதிகளில் கனமழை பதிவாகியிருக்கிறது இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் #கடலூர் , #புதுச்சேரி , #விழுப்புரம் மாவட்டங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கலாம் காற்று குவிதலில் இன்னமும் முன்னேற்றங்கள் இருக்கும்.ஆகவே , அடுத்த 24 மணி நேரத்தில் #திருவண்ணாமலை , #கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகள் உட்பட தமிழக வட உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய வலுவான வெப்பசலன மழை பதிவாகலாம் மேலும் #டெல்டா , #தென்உள் மற்றும் மேற்கு உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான  தகவல்களை பிற்பகலில் நமது #tamil_weather_vlog Youtube பக்கத்தில் வரிவாக விளக்குகிறேன்.

#புதுவை மாநிலத்தை பொறுத்தவரையில் கடந்த 24 மணி நேரத்தில் #புதுச்சேரி பகுதியில் 25 மி.மீ அளவு மழையும் #காரைக்கால் நகர பகுதியில் 14 மி.மீ அளவு மழையும் பதிவாகியிருக்கிறது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
==========================
அண்ணாமலை நகர் , சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) - 127 மி.மீ
சிதம்பரம் AWS (கடலூர் மாவட்டம்) - 125 மி.மீ
கொள்ளிடம் - ஆணைக்காரன்சத்திரம் (மயிலாடுதுறை மாவட்டம்) - 105 மி.மீ
கொத்தவாச்சேரி (கடலூர் மாவட்டம்) - 86 மி.மீ
வடக்குத்து (கடலூர் மாவட்டம்) - 86 மி.மீ
சிதம்பரம் , #கோத்தங்குடி (எம்.ஜீ.ஆர் சிலை அருகில்) - 84 மி.மீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 81 மி.மீ
ஏத்தாப்பூர் (சேலம் மாவட்டம்) - 78 மி.மீ
வானமாதேவி (கடலூர் மாவட்டம்) - 75 மி.மீ
தொழுதூர் (கடலூர் மாவட்டம்) - 74 மி.மீ
மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 74 மி.மீ
சேத்தியாதோப்பு (கடலார் மாவட்டம்) - 72 மி.மீ
தழுத்தலை (பெரம்பலூர் மாவட்டம்) - 69 மி.மீ
குப்பநத்தம் (கடலூர் மாவட்டம்) - 66 மி.மீ
நெய்வேலி AWS (கடலூர் மாவட்டம்) - 66 மி.மீ
கங்கவல்லி (சேலம் மாவட்டம்) - 65 மி.மீ
சீர்காழி (மயிலாடுதுறை மாவட்டம்) - 64 மி.மீ
மணல்மேடு (மயிலாடுதுறை மாவட்டம்) - 62 மி.மீ
குடிதாங்கி (கடலூர் மாவட்டம்) - 62 மி.மீ
விரகனூர் (மதுரை மாவட்டம்) - 62 மி.மீ
சிட்டாம்பட்டி (மதுரை மாவட்டம்) - 55 மி.மீ
நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம்) - 52 மி.மீ
விருத்தாச்சலம் (கடலூர் மாவட்டம்) - 52 மி.மீ
ஆத்தூர் (சேலம் மாவட்டம்) - 51 மி.மீ
குடவாசல் (திருவாரூர் மாவட்டம்) - 50 மி.மீ
புவனகிரி (கடலூர் மாவட்டம்) - 49 மி.மீ
திருவாரூர் (திருவாரூர் மாவட்டம்) - 48 மி.மீ
திருபுவனம் (சிவகங்கை மாவட்டம்) - 45 மி.மீ
உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 44 மி.மீ
மங்கலாபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 44 மி.மீ
லாக்கூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 44 மி.மீ
ஏறையூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 44 மி.மீ
அண்ணா பல்கலைகழகம் (சென்னை மாநகர்) - 43 மி.மீ
கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர் மாவட்டம்) - 40 மி.மீ
கோளியனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 40 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம்) - 40 மி.மீ
காரியப்பட்டி (விருதுநகர் மாவட்டம்) - 38 மி.மீ
ஜெயங்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) - 38 மி.மீ
மதுரை AWS (மதுரை மாவட்டம்) - 38 மி.மீ
கமுதி (ராமநாதபுரம் மாவட்டம்) - 38 மி.மீ
நன்னிலம் (திருவாரூர் மாவட்டம்) - 37 மி.மீ
வி.களத்தூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 37 மி.மீ
வேப்பந்தட்டை (பெரம்பலூர் மாவட்டம்) -36 மி.மீ
வானூர் (விழுப்புரம் மாவட்டம்) - 35 மி.மீ
மானாமதுரை (சிவகங்கை மாவட்டம்) - 35 மி.மீ
மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம்) - 34 மி.மீ
வீரகனூர் (சேலம் மாவட்டம்) - 34 மி.மீ
நாகப்பட்டினம் (நாகை மாவட்டம்) - 33 மி.மீ
உசிலம்பட்டி (மதுரை மாவட்டம்) - 32 மி.மீ
திருச்சுழி (விருதுநகர் மாவட்டம்) - 32 மி.மீ
அய்யம்பேட்டை (தஞ்சை மாவட்டம்) - 32 மி.மீ
வேதாரண்யம் (நாகை மாவட்டம்) - 32 மி.மீ
தலைஞாயிறு (நாகை மாவட்டம்) - 32 மி.மீ
சேலம் (சேலம் மாவட்டம்)  - 32 மி.மீ
கொரடாச்சேரி (திருவாரூர் மாவட்டம்) - 30 மி.மீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை மாவட்டம்) - 30 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com

30 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக