27-09-2020 நேரம் காலை 10:50 மணி இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக தென் உள் மாவட்டங்கள் உட்பட தமிழக உள் மாவட்டங்களில் ஆங்காங்கே வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு மேலும் வட கடலோர மாவட்டங்களிலும் ஆங்காங்கே வெப்பசலன மழை பதிவாகலாம் நேற்று நாம் எதிர்பார்த்து மழை பதிவாகாத பகுதிகளிலும் இன்று அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் மழை பதிவாகும் என நம்பலாம்.#சென்னை - #புதுச்சேரி இடைபட்ட பகுதிகளில் இன்றும் காற்று சிறப்பாக குவிய வாய்ப்புகள் இருப்பதையும் அறிய முடிகிறது.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் விரிவாக நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.
தென்மேற்கு பருவமழை விலகல்
==========================
அடுத்து வரக்கூடிய நாட்களில் நிகழும் வாரத்தில் தென்மேற்கு பருவமழை வட மேற்கு இந்தியாவில் விலகியதாக அறிவிக்கப்படும்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
===========================
கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம்) - 27 மி.மீ
மதுக்கூர் (தஞ்சை மாவட்டம்) -  25 மி.மீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்) -  24 மி.மீ
பட்டுக்கோட்டை (தஞ்சை மாவட்டம்) - 23 மி.மீ
எட்டையபுரம் (தூத்துக்குடி மாவட்டம்) - 19 மி.மீ
காரியபட்டி (விருதுநகர் மாவட்டம்) -  17 மி.மீ
சாத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 14 மி.மீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சை மாவட்டம்) -  12 மி.மீ
மனல்மேல்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) -  12 மி.மீ
வேம்பக்கோட்டை அணை (விருதுநகர் மாவட்டம்) -  12 மி.மீ
பந்தலூர் (நீலகிரி மாவட்டம்) --9 மி.மீ
கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) -  9 மி.மீ
முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம்) -  8 மி.மீ
ஒரத்தநாடு ARG (தஞ்சை மாவட்டம்) -  6 மி.மீ
அருப்புக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்) - 5 மி.மீ
மஞ்சலாறு (தஞ்சை மாவட்டம்) -   5 மி.மீ
விருதுநகர் AWS (விருதுநகர் மாவட்டம்) - 5 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
5 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
  
