இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 26 செப்டம்பர், 2020

26.09.2020 Todays Weather Forecast in tamil | Last 24 hours complete rainfall data of tamilnadu and puducherry

0

26-09-2020 நேரம் காலை 9:45 மணி கடந்த 24 மணி நேரத்தில் #புதுக்கோட்டை மாவட்டம் #திருமயம் சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 96 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் வெப்பசலன மழை பதிவாகியுள்ளது.

இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை நேற்றை போன்றே பதிவாகலாம் #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட வட மாவட்டங்களின் இன்றைய வானிலையை பொறுத்தவரையில் எனக்கு மிகவும் உறுத்தலாக இருந்த ஒரு விஷயம் வெப்பம் தான் நேற்று நள்ளிரவு மற்றும் இன்றைய அதிகாலை நேரத்தில் தெற்கு ஆந்திர கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய கடலோர பகுதிகளில் குவிந்த மழை மேகங்களால் வெப்பநிலை குறைந்து காணப்பட்டது தற்சமயம் மீண்டும் #சென்னை மாநகரின் தெற்கு புறநகர் பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்க தொடங்கிவிட்டது இது மழைக்கான வாய்ப்புகள் இருப்பதைத் தான் மறைமுகமாக நமக்கு உணர்ந்துகின்றன.கடல் காற்றின் (#Sea_Breeze) சாதகத்தன்மையை பொறுத்து இன்றும் #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட வட கடலோர , வட மற்றும் வட உள் மாவட்டங்களில் ஆங்காங்கே அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலன மழை பதிவாகலாம் உள் , மேற்கு உள் மற்றும் தென் உள் மாவட்டங்களிலும் அங்கும் இங்குமாக வெப்பசலன மழை பதிவாகலாம்.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.

நான் நேற்று இரவு பதிவிட்டு இருந்தது போல #புதுச்சேரி பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 15 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=====================
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 96 மி.மீ
தேவக்கோட்டை (சிவகங்கை மாவட்டம்) - 93 மி.மீ
திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) - 79 மி.மீ
கங்கவல்லி (சேலம் மாவட்டம்) - 61 மி.மீ
அரிமழம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 57 மி.மீ
அம்பத்தூர் (திருவள்ளுர் மாவட்டம்) - 58 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 54 மி.மீ
ஆண்டிபட்டி (மதுரை மாவட்டம்) - 54 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளுர் மாவட்டம்) - 50 மி.மீ
மஞ்சளாறு (தேனி மாவட்டம்) - 46 மி.மீ
காரைக்குடி (சிவகங்கை மாவட்டம்) - 43 மி.மீ
வாடிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 40 மி.மீ
மருங்காபுரி (திருச்சி மாவட்டம்) - 37 மி.மீ
சோழவந்தான் (மதுரை மாவட்டம்) - 37 மி.மீ
ஈரோடு வடக்கு (ஈரோடு மாவட்டம்) - 35 மி.மீ
வேடசந்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) - 34 மி.மீ
ஈரோடு (ஈரோடு மாவட்டம்) - 33 மி.மீ
வரட்டுபள்ளம் (ஈரோடு மாவட்டம்) - 33 மி.மீ
சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 31 மி.மீ
மணப்பாறை (திருச்சி மாவட்டம்) -  31 மி.மீ
பொன்னையார் அணை (திருச்சி மாவட்டம்) -  29 மி.மீ
மணப்பாறை ARG (திருச்சி மாவட்டம்) -  27 மி.மீ
மானாமதுரை (சிவகங்கை மாவட்டம்) - 26 மி.மீ
சூளகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 26 மி.மீ
உதகமண்டலம்  (நீலகிரி மாவட்டம்) -  25 மி.மீ
சாத்தையாறு அணை (மதுரை மாவட்டம்) -  24 மி.மீ
புலிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 22 மி.மீ
தொட்டியம்பட்டி (திருச்சி மாவட்டம்) -  22 மி.மீ
பெரியகுளம் PTO (தேனி மாவட்டம்) - 22 மி.மீ
சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம்) -  22 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) -  21 மி.மீ
சிட்டாம்பட்டி (மதுரை மாவட்டம்) - 21 மி.மீ
புழல் ARG (திருவள்ளூர் மாவட்டம்) - 21 மி.மீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை மாநகர் ) -  20 மி.மீ
அதானகோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 20 மி.மீ
செங்குன்றம் (திருவள்ளூர் மாவட்டம்) - 20 மி.மீ
கெட்டி (நீலகிரி மாவட்டம் ) -  19 மி.மீ
கள்ளிக்குடி (மதுரை மாவட்டம் ) - 19 மி.மீ
முசிறி (திருச்சி மாவட்டம்) - 18 மி.மீ
சோத்துப்பாறை அணை (தேனி மாவட்டம்) - 18 மி.மீ
காளையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 18 மி.மீ
நெமூர் (விழுப்புரம் மாவட்டம்) - 18 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம் ) - 18 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 18 மி.மீ
விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம்) -  18 மி.மீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு மாவட்டம்) -  17 மி.மீ
கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) -  17 மி.மீ
கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 17 மி.மீ
தள்ளாகுளம் (மதுரை மாவட்டம்) -  16 மி.மீ
உசிலம்பட்டி (மதுரை மாவட்டம்) - 16 மி.மீ
பவானி (ஈரோடு மாவட்டம்) - 16 மி.மீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர் மாவட்டம்) - 16 மி.மீ
தம்மம்பட்டி (சேலம் மாவட்டம்) - 15 மி.மீ
மேட்டுப்பட்டி (மதுரை மாவட்டம்) - 15 மி.மீ
பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம்) - 15 மி.மீ
முதுகுளத்தூர் (ராமநாதபுரம் மாவட்டம் ) - 15 மி.மீ
கோவிலங்குளம் (விருதுநகர் மாவட்டம்) - 15 மி.மீ
குப்பனம்பட்டி (மதுரை மாவட்டம் ) - 15 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 14 மி.மீ
நத்தம் AWS (திண்டுக்கல் மாவட்டம்) - 13 மி.மீ
திருத்தணி (திருவள்ளுர் மாவட்டம்) - 13 மி.மீ
நாவலூர் கோட்டபட்டு (திருச்சி மாவட்டம்) -  12 மி.மீ
முண்டியம்பாக்கம் (விழுப்புரம் மாவட்டம்) - 12 மி.மீ
அரியலூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 12 மி.மீ
பேரையூர் (மதுரை மாவட்டம்) -  12 மி.மீ
கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு மாவட்டம்) -  11 மி.மீ
குளித்தலை (கரூர் மாவட்டம்) - 11 மி.மீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளுர் மாவட்டம் ) -  11 மி.மீ
திருமங்கலம் (மதுரை மாவட்டம்) - 11 மி.மீ
மதுரை AWS (மதுரை மாவட்டம்) -  11 மி.மீ
கஞ்சனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 10 மி.மீ
கோளியனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 10 மி.மீ
கவுந்தப்பாடி (ஈரோடு மாவட்டம்) - 10 மி.மீ
திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 10 மி.மீ
தோகைமலை (கரூர் மாவட்டம்) - 10 மி.மீ
மனலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  10 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com


10 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக