25-09-2020 நேரம் காலை 10:30 மணி நாம் எதிர்பார்த்து இருந்தது போல கடந்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மாவட்டங்களில் அங்கும் இங்குமாக வெப்பசலன மழை பதிவாகியிருக்கிறது இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம் கடந்த 24 மணி நேரத்தில் #தூத்துக்குடி மாவட்டம் #கடம்பூர் சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 77 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.அடுத்த 24 மணி நேரத்தில் கர்நாடக மாநிலம் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர மாவட்ட பகுதிகளிலும் சில இடங்களில் வலுவான இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம் தெற்கு ஆந்திர பகுதிகளிலும் மழை ஆங்காங்கே பதிவாகலாம்.நேற்றைய பதிவில் நான் குறிப்பிட்டு இருந்ததை போன்று கடல் காற்றின் சாதகத்தன்மையை பொறுத்து #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் அங்கும் இங்குமாக ஒரு சில இடங்களில் மழை பதிவாகலாம் #திருவள்ளுர் மாவட்ட வடக்கு பகுதிகளிலும் மழை பதிவாகலாம்.
அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=======================
கடம்பூர் (தூத்துக்குடி மாவட்டம்) - 77 மி.மீ
நெமூர் - அனந்தபுரம் புறவழிச்சாலை (விழுப்புரம் மாவட்டம் ) - 41 மி.மீ
செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்) - 22 மி.மீ
கல்லட்டி (நீலகிரி மாவட்டம்) - 17 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 17 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளூர் மாவட்டம்) - 15 மி.மீ
சோளிங்கர் (ராணிபேட்டை மாவட்டம்) - 15 மி.மீ
குமாரப்பாளையம் (நாமக்கல் மாவட்டம்) - 14 மி.மீ
திருபுவனம் (சிவகங்கை மாவட்டம்) - 12 மி.மீ
மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம்) - 11 மி.மீ
செம்மேடு (விழுப்புரம் மாவட்டம்) - 10 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 10 மி.மீ
மயிலம் (விழுப்புரம் மாவட்டம்) - 8 மி.மீ
கீழ் பென்னாத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 8 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 8 மி.மீ
அன்னவாசல் (புதுக்கோட்டை மாவட்டம்) - 7 மி.மீ
காவேரிப்பாக்கம் (ராணிபேட்டை மாவட்டம்) - 7 மி.மீ
கலசப்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 7 மி.மீ
பவானி (ஈரோடு மாவட்டம்) - 7 மி.மீ
இலுப்பூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 6 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 6 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 5 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 5 மி.மீ
உதகமண்டலம் கிழக்கு (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
5 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.