இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 24 செப்டம்பர், 2020

24.09.2020 Today's weather forecast in Tamil | Last 24 hours rainfall data of tamilnadu and puducherry

0
24-09-2020 நேரம் காலை 9:50 மணி தமிழக உள் மாவட்டங்களில் நாம் முன்பு எதிர்பார்த்து இருந்தது போல கீழடுக்கிலயே மேற்கு திசை (#Weak_westerlies_in_surface_level) காற்றின் வீரியம் குறைந்து காணப்படுவதை அறிய முடிகிறது.இன்று அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக தென் உள் , தென் , மேற்கு ,மேற்கு உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை அங்கும் இங்குமாக பதிவாக தொடங்களம் மேலும் உள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.#புலிகேட் ஏரியை ஒட்டிய தெற்கு ஆந்திர பகுதிகளிலும் திருவள்ளூர் மாவட்ட வடக்கு பகுதிகளிலும் சில இடங்களில் மழை பதிவாகலாம் கடல் காற்றின் சாதகத்தன்மையை பொறுத்து #சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளிலும் மழை வாய்ப்புகள் உருவாகலாம்.#சென்னை மாநகரை பொறுத்தவரையில் "Hit or Miss" ரகம் தான்.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவலை பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.

இன்றுடன் ஒப்பிடுகையில் நாளை மேலும் வெப்பசலன மழை அதிகரிக்கலாம்.திருவள்ளூர் , சென்னை மாநகர் பகுதிகளுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

வடமேற்கு இந்தியாவின் தென்மேற்கு பருவமழை விலகல் (#Monsoon_Withdrawal) விரைவில் அறிவிக்கப்படும்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=====================
பந்தலூர் (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 6 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 5 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மவட்டம்) - 5 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 5 மி.மீ
பாடந்துரை  (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 4 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) -  4 மி.மீ
குளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 4 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com

4 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக