21-09-2020 காலை 9:10 மணி நாம் எதிர்பார்த்து இருந்தது போல கடந்த 24 மணி நேரத்திலும் தமிழக #மேற்கு_தொடர்ச்சி_மலை பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பதிவாகி வருகிறது முக்கிய #தமிழக_அணை களின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது பல்வேறு அனைகளும் அதன் முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது.வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைக்கொண்டு இருக்கும் #குறைந்த_காற்றழுத்த_தாழ்வு பகுதியின் காரணமாக இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் உட்பட #கேரள , #கர்நாடக மற்றும் #மஹாராஷ்டிர ,#கோவா மாநில மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மேற்கு கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பதிவாகலாம்.
தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களை பொறுத்தவரையில் நேற்றைய சூழல்களே தொடரும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் அங்கும் இங்குமாக சாரல் , தூரல் அவ்வப்பொழுது பதிவாகலாம்.#சென்னை , #புதுச்சேரி , #கடலூர் , #காரைக்கால் , #நாகப்பட்டினம் ,#தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர பகுதிகள் உட்பட வட கடலோர மற்றும் உள் மாவட்டங்களின் பல்வேறு இடங்களிலும் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவு மெல்ல அதிகரிக்க தொடங்கியிருப்பதை அறிய முடிகிறது இது இந்த காலகட்டத்தில் இயல்பு தான் மழை பதிவாகாத நாட்களில் பனிப்பொழிவு சற்று அதிகமாக இருக்கலாம்.வழக்காமாக ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் இதைப்போன்ற கேள்விக்கு தவறாமல் கேட்கும் ஒரு கேள்விக்கு நானே பதில் வழங்கி விடுகிறேன் பனிப்பொழிவுக்கும் வடகிழக்கு பருவமழைக்கும் தொடர்பு இல்லை வெயில் காலத்திற்கும் பிறகு குளிர் காலம் வருவது இயல்பான ஒன்றே மழை பதிவாகும் பகுதிகளில் சூழல்கள் மாறும்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 182 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 119 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 106 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 105 மி.மீ
சின்னக்கல்லாறு (கோவை மாவட்டம்) - 102 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 93 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 87 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 58 மி.மீ
பந்தலூர் (நீலகிரி மாவட்டம்) - 57 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 54 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 52 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 43 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 40 மி.மீ
கொட்டாரம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 38 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 37 மி.மீ
பாபநாசம் அணை (நெல்லை மாவட்டம்) - 33 மி.மீ
பொள்ளாச்சி (கோவை மாவட்டம்) - 28 மி.மீ
குந்தாபாலம் (நீலகிரி மாவட்டம்) - 28 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 28 மி.மீ
பேச்சிப்பாரை (கன்னியாகுமரி மாவட்டம்) - 26 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 25 மி.மீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 23 மி.மீ
சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 23 மி.மீ
இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 22 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 20 மி.மீ
தளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 20 மி.மீ
கன்னிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 17 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 17 மி.மீ
பாடந்துரை (நீலகிரி மாவட்டம்) - 16 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 16 மி.மீ
வீரபாண்டி (தேனி மாவட்டம்) - 16 மி.மீ
தமிழ்நாடு விவசாய பல்கலைகழகம் , கோயம்புத்தூர் (கோவை மாவட்டம்) - 15 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
செருமுள்ளி (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
குளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 13 மி.மீ
தென்காசி (தென்காசி மாவட்டம்) - 12 மி.மீ
மணிமுத்தாறு அணை (நெல்லை மாவட்டம்) - 11 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
10 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.