01-09-2020 நேரம் மாலை 4:40 மணி நான் கடந்த குரல் பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல #விழுப்புரம் , #விக்கிரவாண்டி , #கேதர் சுற்றுவட்டப் பகுதிகளில் நீண்ட நேரமாக பதிவாகி வந்த வலுவான மழை மேகங்கள் நாம் எதிர்பார்த்தபடி #திருக்கோவிலூர் சுற்றுவட்டப் பகுதிகளிலும் சிறப்பான மழை பொழிவை ஏற்படுத்தி வருவதை அறிய முடிகிறது மேலும் #மன்னடிபெட் , #திருவாக்கரை , #திருபுவனை சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #புதுச்சேரி மாவட்டத்திலும் ஆங்காங்கே மழை பொழிவை ஏற்படுத்தி வருவதை அறிய முடிகிறது - https://youtu.be/Sle-t3nB5Qw
மேலும் #கங்கைகொண்டசோழபுரம் , #லால்பேட்டை , #ஸ்ரீமுஷ்ணம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #கமுதி சுற்றுவட்டப் பகுதிகளில் பதிவாகி வந்த மழை மேகங்கள் நாம் எதிர்பார்த்தது போல #பந்தல்குடி சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை மேகங்கள் பதிவாகி வருவதை அறிய முடிகிறது இன்னும் சற்று நேரத்தில் #பெண்ணாடம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை பதிவாக தொடங்கலாம் மேலும் #ஏற்காடு சுற்றுவட்டப் பகுதிகளில் மிக சிறப்பான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன #சேலம் மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.
மேலும் #அறந்தாங்கி , #ஆவுடையார்கோயில் , #அரிமழம் , #பூவற்றக்கூடி ,#பிள்ளையார்பட்டி , #ஆவணம் , #காரைக்குடி சுற்றுவட்டப் பகுதிகளிலும் சிறப்பான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #தேன்கனிக்கோட்டை பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.
இன்னும் சற்று நேரத்தில் அடுத்த குரல் பதிவை பதிவிடுகிறேன்.