இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

01.09.2020 afternoon 3:00 PM upcoming hours rainfall possibilities | weather analysis | real-time weather forecast

0

01-09-2020 நேரம் பிற்பகல் 3:00 மணி #சமயபுரம் , #லால்குடி , #பூண்டி சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #திருச்சி மாநகரின் புறநகர் பகுதிகளில் சிறப்பான வெப்பசலன மழை மேகங்கள் பதிவாகி வருவதை அறிய முடிகிறது மேலும் #காவிரிபட்டினம் , #போச்சம்பள்ளி , #காரிமங்களம் பகுதிகள் உட்பட #கிருஷ்ணகிரி - #தர்மபுரி இடைபட்ட சாலையின் பல்வேறு இடங்களிலும் #திருவள்ளூர் மாவட்டம் #ஊத்துக்கோட்டை சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #ராமநாதபுரம் மாவட்டம் #சத்திரக்குடி , #இளையான்குடி , #ராஜசிங்கமங்களம் அருகிலும் #தேனி மாவட்டம் #ஆண்டிபட்டி , #ஸ்ரீரெங்கபுரம் அருகிலும் #நாமக்கல் , #துறையூர் , #ஆத்தூர் சுற்றுவட்டப் பகுதிகளிலும் #காஞ்சிபுரம் - #வந்தவாசி இடைப்பட்ட பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன #சென்னை மாநகரிலும் ஆங்காங்கே மழை மேகங்கள் பதிவாகி வருவதை அறிய முடிகிறது.

இன்னும் சற்று நேரத்தில் #திருச்சி - #புதுக்கோட்டை , #திருச்சி - #திருவையாறு மற்றும் #திருச்சி - #தஞ்சை இடைபட்ட புறவழிசாலை பகுதிகளின் அநேக இடங்களிலும் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக தொடங்கலாம் #திருச்சி மாநகர் , #துறையூர் , #பெரம்பலூர் - #திருச்சி இடைபட்ட பகுதிகளிலும் மழை தீவிரமடைய தொடங்கலாம் மேலும் #பரமக்குடி பகுதிகளிலும் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.#விழுப்புரம் - #திண்டிவனம் இடைபட்ட பகுதிகளிலும் #சேலம் மாவட்டத்திலும் ஆங்காங்கே மழை பதிவாக தொடங்கலாம்.

அடுத்த சில மணி நேரங்களில் நிகழ் நேர தகவல்களுடன் அடுத்த சில மணி நேர மழை வாய்ப்புகளை நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.

#Emmanuel_Paul_Antony
#puducherry_Weather
#tamilnaduweather.com

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக