02-12-2015 ஆம் ஆண்டு #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பதிவாகிய கனமழைக்கான காரணம் தொடர்பாக இன்றும் தெளிவில்லாத விளக்கங்களை மட்டுமே தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியை கொண்டு வழங்க முடிகிறது.
வலுவான எல்-நினோ , அதீத கடல்பரப்பு வெப்பநிலை என ஆயிரம் ஆயிரம் காரணங்களை பாதிப்புகளுக்கு பிறகே அள்ளி வழங்க முடிந்தது.இயற்கை மிக வலிமை மிக்கது என்பதனை மீண்டும் ஒரு முறை உணரச்செய்தத் தருணம் இது.ஆனால் அத்தனை பாதிப்புகளுக்கும் காரணம் இயற்கை மட்டுமல்ல.
02-12-2015 ஆம் ஆண்டு காலை 8:30 மணி வரையில் பதிவாகிய மழை அளவுகளின் படி அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்
==================
செம்பரபாக்கம் ஏரி (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 475 மி.மீ
காட்டாங்கொளத்தூர் (செங்கல்பட்டு மாவட்டம் ) - 445 மி.மீ
காட்டுப்பாக்கம் (செங்கல்பட்டு மாவட்டம் ) - 429 மி.மீ
திருப்போருர் (செங்கல்பட்டு மாவட்டம் ) - 348 மி.மீ
மீனம்பாக்கம் , சென்னை விமான நிலையம் (சென்னை மாநகர் ) - 345 மி.மீ
கொரட்டூர் அணை (திருவள்ளூர் மாவட்டம் ) - 336 மி.மீ
புழல் AWS (திருவள்ளூர் மாவட்டம் ) - 325 மி.மீ
செங்குன்றம் (திருவள்ளூர் மாவட்டம் ) - 320 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம்,சைதாப்பேட்டை (சென்னை மாநகர் ) - 319 மி.மீ
கோளப்பாக்கம் (சென்னை மாநகர் ) - 310 மி .மீ
தரமணி (சென்னை மாநகர் ) - 300 மி.மீ
புழல் ஏரி (திருவள்ளூர் மாவட்டம் ) - 294 மி.மீ
நுங்கம்பாக்கம் (சென்னை மாநகர் ) - 294 மி.மீ
சோழவரம் ஏரி (திருவள்ளூர் மாவட்டம் ) - 293 மி.மீ
பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம் ) - 292 மி.மீ
செய்யூர் (செங்கல்பட்டு மாவட்டம் ) - 289 மி.மீ
ஆவடி (திருவள்ளூர் மாவட்டம் ) - 284 மி.மீ
தாமரைப்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம் ) - 281 மி.மீ
சித்தமூர் , வெல்லப்புதூர் ஏரி (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 274 மி.மீ
பலவேடு ஏரி (திருவள்ளூர் மாவட்டம் ) - 271 மி.மீ
ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம (செங்கல்பட்டு மாவட்டம் ) - 260 மி.மீ
மாதவரம் ( திருவள்ளூர் மாவட்டம் ) - 257 மி.மீ
மீஞ்சூர் ( திருவள்ளூர் மாவட்டம் ) - 231 மி.மீ
எண்ணூர் ( திருவள்ளூர் மாவட்டம் ) - 231 மி.மீ
ஊத்துக்கோட்டை ( திருவள்ளூர் மாவட்டம் ) - 226 மி.மீ
பூண்டி ஏரி( திருவள்ளூர் மாவட்டம் ) - 189 மி.மீ
வேம்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம் ) - 174 மி.மீ
ஸ்ரீபெரம்புத்தூர் AWS (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 171 மி.மீ
அச்சரம்பாக்கம் (செங்கல்பட்டு மாவட்டம் ) - 167 மி.மீ
புதுவை மாநிலம்
================
புதுச்சேரி - 218 மி.மீ
2015 இல் நிலவி வந்த சூழல்கள் தற்சமயம் இல்லை.ஆனால் இயற்கை மனிதனின் கணிப்புகளுக்கு அப்பார்ப்பட்டது ஒரு நாள் மழை அத்தனை கணிப்புகளையும் தவிடு பொடியாக்கிவிடும்.
இந்த ஆண்டு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலைகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகமாகவே உருவாகலாம்.விரைவில் வடகிழக்கு பருவமழை தொடர்பான எனது கணிப்புகளை மேலோட்டமாக பதிவிடுகிறேன்.