இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 29 ஆகஸ்ட், 2020

North-east monsoon 2020 | Upcoming week weather over look |NEM might be good for North Coastal Tamilnadu

0
அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம்?

29-08-2020 நேரம் காலை 11:10 மணி அடுத்து வரக்கூடிய நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு சிறப்பான வெப்பசலன மழை காத்திருக்கிறது.30-08-2020 ஆகிய நாளை அல்லது 31-08-2020 ஆகிய நாளை மறுநாள் முதல் தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் வெப்பசலன மழை மீண்டும் அதிகரிக்க தொடங்க அதிக வாய்ப்புகள் உள்ளது மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை ஆங்காங்கே பரவலாக பதிவாகலாம்.#சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட வட கடலோர மாவட்டங்களில் அவ்வப்பொழுது இந்த காலகட்டத்தில் பதிவாக இருக்கும் வெப்பசலன மழையானது சிறப்பு வாய்ந்தது அதனுடைய வலுவும் மழை பொழியும் நேரமும் ஜுன் மற்றும் ஜூலை மாதங்களை விட அதிகமாகவே இருக்கும் உள் மாவட்டங்களை பொறுத்தவரையில் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே கணமழை பதிவாகலாம்.

தற்சமயம் இந்தியாவின் மத்திய பகுதிகளில் #மத்திய_பிரதேச மாநிலத்தில் சிறப்பான மழையை பதிவு செய்து வரும் அந்த #காற்றழுத்த_தாழ்வு_பகுதி யானது அடுத்து வரக்கூடிய வட மேற்கு மற்றும் வட-வட மேற்கு திசையில் நகரந்து #ஜெய்ப்பூர் , #டில்லி என இந்தியாவின் வட மாநிலங்களில் மழைப் பொழிவை ஏற்படுத்தி பின்னர் #பாகிஸ்தான் , #காஷ்மீர் பகுதிகளை அடைய வாய்ப்புகள் உள்ளது.நாளை அது வட மேற்கு திசையில் மத்திய பகுதிகளில் இருந்து நகர்ந்த பிறகு அரபிக்கடல் பகுதிகளில் இருந்து வரும் மேற்கு திசை காற்று #நேபால் , #பூட்டான் மற்றும் #அஸ்ஸாம் பகுதிகளின் இமயமலை அடிவார பகுதிகளை அடைகிறது கிட்டத்தட்ட #Break_Monsoon. #Break_Monsoon என்றால் என்ன இதனால் தமிழகத்தில் எதனால் வெப்பசலன மழை அதிகரிக்கிறது என்பது தொடர்பான விரிவான தகவல்களை அறிய - https://youtu.be/Pt2MyME7Y9A

பாலக்காடு கணவாய் காற்று பகுதிகள் உட்பட மேற்கு உள் மற்றும் மேற்கு மாவட்டங்களிலும் பிறக்க இருக்கும் செப்டம்பர் மாதத்தில் சில நாட்கள் சிறப்பான வெப்பசலன மழை பதிவாகும் வாய்ப்புகள் உண்டு.

வட கிழக்கு பருவமழை
====================
நான் முன்பாகவே இந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை இயல்பான நேரத்தில் தொடங்க வாய்ப்புகள் இருப்பதாக பதிவிட்டு இருந்தேன்.என்னுடைய கடந்த கால அனுபவ படிப்பினைகள் மற்றும் கணிப்புகளின் படி இந்த ஆண்டு வட கடலோர மாவட்டங்களில் சிறப்பான மழை வட கிழக்கு பருவமழை காலகட்டத்தில் பதிவாக வாய்ப்புகள் உண்டு.அக்டொபர் இறுதி முதல் நவம்பர் முதல் 10 நாட்கள் வரை மிகவும் முக்கியமான காலகட்டம் என்றே சொல்லலாம்.செப்டம்பர் மாத மத்தியல் 2020 ஆம் ஆண்டின் வட கிழக்கு பருவமழை தொடர்பான எனது கணிப்புகளை விரிவான பதிவாக பதிவிடுகிறேன்.

ஒவ்வொரு நாளும் அடுத்த 24 மணி நேர மழை வாய்ப்புகளை அந்தந்த நாட்களில் பிற்பகல் நேரத்தில் பதிவிடுகிறேன்.

Predicted by
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக