29-08-2020 நேரம் பிற்பகல் 1:20 மணி இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் நேற்றை போலவே தென் உள் மற்றும் தென் மாவட்டங்களில் அங்கும் இங்குமாக சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம் #மதுரை மாவட்ட கிழக்கு பகுதிகள் #தூத்துக்குடி மாவட்ட வடக்கு மற்றும் மேற்கு பகுதிகள் #நெல்லை மாவட்ட பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய #விருதுநகர் மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாகலாம்.
சாதகமான கடல் காற்றை பொறுத்து இன்று அடுத்த 24 மணி நேரத்தில் #புலிகேட் ஏரியை ஒட்டிய தெற்கு ஆந்திர பகுதிகளில் மழை மேகங்கள் குவிய தொடங்க வாய்ப்புகள் உண்டு #புலிகேட் ஏரியை ஒட்டிய #திருவள்ளூர் மாவட்ட பகுதிகளிலும் #சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளிலும் அங்கும் இங்குமாக சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.#சென்னை மாநகரை பொறுத்தவரையில் "Hit or Miss" ரகம் தான்.
நாளை முதல் வெப்பசலன மழையின் அளவு மேலும் அதிகரிக்க தொடங்க வாய்ப்புகள் உண்டு.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
==========================
திருமங்கலம் (மதுரை மாவட்டம்) - 46 மி.மீ
எட்டையபுரம் (தூத்துக்குடி மாவட்டம்) - 33 மி.மீ
வாட்ராப் (விருதுநகர் மாவட்டம்) - 28 மி.மீ
மதுரை விமானநிலையம் (மதுரை மாவட்டம்) - 26 மி.மீ
ஆண்டிப்பட்டி (தேனி மாவட்டம்) - 25 மி.மீ
காமாட்சிபுரம் (திண்டுக்கல் மாவட்டம்) - 20 மி.மீ
வேப்பூர் (கடலூர் மாவட்டம்) - 13 மி.மீ
முதுகுளத்தூர் (ராமநாதபுரம் மாவட்டம்) - 8 மி.மீ
கல்லன்றி (மதுரை மாவட்டம்) - 7 மி.மீ
மேட்டுப்பட்டி (மதுரை மாவட்டம்) - 6 மி.மீ
கடலடி (தூத்துக்குடி மாவட்டம்) - 6 மி.மீ
செந்துறை (அரியலூர் மாவட்டம்) - 6 மி.மீ
கீழாநிலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 5 மி.மீ
ஒட்டஞ்சத்திரம் (திண்டுக்கல் மாவட்டம்) - 4 மி.மீ
வைகை அணை (தேனி மாவட்டம்) - 4 மி.மீ
திருபுவனம் (சிவகங்கை மாவட்டம்) - 3 மி.மீ
தள்ளாகுளம் (மதுரை மாவட்டம்) - 3 மி.மீ
மதுரை வடக்கு (மதுரை மாவட்டம்) - 3 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 1 மி.மீ
வேம்பக்கோட்டை அணை (விருதுநகர் மாவட்டம்) - 1 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com