08-08-2020 நேரம் காலை 8:40 மணி கடந்த 24 மணி நேரத்தில் #நீலகிரி மாவட்ட மேற்கு பகுதியான #தேவாலா சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 341 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது மேலும் நாம் எதிர்பார்த்தது போல #மேற்கு_தொடர்ச்சி_மலை பகுதிகளின் பல்வேறு இடங்களிலும் தமிழக உள் மாவட்டங்களிலும் குறிப்பாக #கள்ளக்குறிச்சி , #தஞ்சை மாவட்ட தெற்கு பகுதிகள் , #புதுக்கோட்டை மாவட்ட வடக்கு பகுதிகள் , #சேலம் மாவட்ட மேற்கு பகுதிகள் என ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பதிவாகியிருக்கிறது.
மாதிரிகளின் தற்போதைய கணிப்புகளை கொஞ்சம் புறந்தள்ளி சிந்தித்தால் இன்று அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புகள் உண்டு இதன் காரணமாக அதனுடைய சாதகத்தன்மையை பொறுத்து #புலிகேட் ஏரியை ஒட்டிய தெற்கு ஆந்திர பகுதிகளில் மழைமேகங்கள் குவிய வாய்ப்புகள் உண்டு.#திருவள்ளுர் மாவட்ட பகுதிகளிலும் #சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் மழை பதிவாகலாம். மாநகர் பகுதிகளை பொறுத்தவரையில் "Hit or Miss" ரகம் தான் மழை பதிவானால் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.இது தொடர்பான விரிவான குரல் பதிவை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் பதிவிடுகிறேன்.அதேபோல இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் நேற்றை போலவே #தஞ்சை மாவட்டத்தின் சில பகுதிகள் உட்பட உள் மாவட்டங்களிலும் அங்கும் இங்குமாக சில இடங்களில் லேசானது முதல் மிதமான வெப்பசலன மழை பதிவாகலாம்.கேரளாவில் இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் கனமழை பதிவாகலாம்.
#சோலையாறு அணை நிரம்பியது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 341 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 188 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 181 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 126 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம் ) - 110 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 108 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 91 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 85 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 84 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 83 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 82 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 79 மி.மீ
அப்பர்பவாணி (நீலகிரி மாவட்டம்) - 65 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 62 மி.மீ
செருமுள்ளி (நீலகிரி மாவட்டம்) - 53 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 51 மி.மீ
பாடந்துரை பிறையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 51 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 48 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 40 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 34 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 32 மி.மீ
செங்கோட்டை (தென்காசி மாவட்டம்) - 28 மி.மீ
பெருங்களூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 28 மி.மீ
அலக்கரை எஸ்டேட், குன்னூர் (நீலகுரி மாவட்டம்) - 25 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 25 மி.மீ
பொல்லாந்துரை (கடலூர் மாவட்டம்) - 23 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம்) - 21 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 16 மி.மீ
சிவகிரி (தென்காசி மாவட்டம்) - 15 மி.மீ
ஏதாப்பூர் (சேலம் மாவட்டம்) - 14 மி.மீ
நகல்குடி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 14 மி.மீ
கரம்பைக்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 13 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 12 மி.மீ
ஆழியாறு (கோவை மாவட்டம்) - 11 மி.மீ
மாசிநாங்குடி (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
குளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 11 மி.மீ
பேச்சிப்பாரை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 10 மி.மீ
பொள்ளாச்சி (கோவை மாவட்டம்) - 10 மி.மீ
தென்காசி (தென்காசி மாவட்டம்) - 9 மி.மீ
உதகை கிழக்கு (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
ஸ்ரீமுஷ்ணம் (கடலூர் மாவட்டம்) - 8 மி.மீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
ராமநாதபுரம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 6 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 6 மி.மீ
பெருஞ்சாணி (கன்னியாகுமரி மாவட்டம்) - 6 மி.மீ
இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 6 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) - 5 மி.மீ
சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 5 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளுர் மாவட்டம்) - 5 மி.மீ
கல்லட்டி (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
கொட்டாரம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 5 மி.மீ
ஆயிங்குடி (தென்காசி மாவட்டம்) - 5 மி.மீ
குந்தா பாலம் (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.