08-08-2020 நேரம் இரவு 9:10 மணி #காரைக்கால் பகுதிகளில் மிக சிறப்பான மழை பதிவாகி வருகிறது நாம் கடந்த பதிவில் அடுத்த சில மணி நேர வாய்ப்புகள் எதிர்பார்த்து இருந்தது போல #கும்பகோணம் பகுதிகளில் இருந்து மழை மேகங்கள் நாம் எதிர்பார்த்தது போல #மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பொழிவை ஏற்படுத்தி தற்சமயம் #காரைக்கால் பகுதிகளிலும் சிறப்பான மழையை பதிவு செய்து வருகின்றன மேற்கு திசை காற்று இந்த மழைக்கு வலுசேர்க்கிறது #கும்பகோணம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் நீண்ட நேரமாக மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன தற்சமயம் #திருவிடைமருதூர் , #திருநாகேஸ்வரம் சுற்றுவட்டப் பகுதிகளில் மிக சிறப்பான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன அடுத்த சில நிமிடங்களுக்கும் #காரைக்கால் பகுதியில் மழை தொடரும் என நம்பலாம்.
மேலும் #மணமேல்குடி , #தொண்டி , #கோட்டைப்பட்டணம் , #கட்டுமாவடி , #ஜமாலியா சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #தஞ்சை , #புதுக்கோட்டை மற்றும் அதனை ஒட்டிய வடக்கு #ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருவதை அறிய முடிகிறது அடுத்த சில மணி நேரங்களில் #திருவாரூர் மற்றும் #நாகை மாவட்ட தெற்கு கடலோர பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பதிவாகலாம்.
தற்சமயம் #திட்டக்குடி , #பெண்ணாடம் , #நயினார்பாளையம் சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #கடலூர் மற்றும் #கள்ளக்குறிச்சி மாவட்ட மேற்கு பகுதிகளிலும் சில இடங்களில் மழை பதிவாகி வருகிறது.மேலும் நாம் எதிர்பார்த்து இருந்தது போல #அரக்கோணம் , #நேமிலி , #பேரம்பாக்கம் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன #சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளிலும் மழை பதிவாகும் #சென்னை மாநகரில் மழை பதிவானால் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
பதிவாகும் மழையை அனுபவியுங்கள் தோழர்களே...மழை அளவுகளுடன் இன்று இரவு மீண்டும் பதிவிடுகிறேன்.