இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 26 ஆகஸ்ட், 2020

August 26 , 2020 Today's Weather Forecast in Tamil | Last 24 Hours Complete rainfall data of Tamilnadu and Puducherry

0

26-08-2020 நேரம் காலை 10:20 மணி இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம் குறிப்பாக #தென்_மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் தென் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சிறப்பான வெப்பசலன மழை பதிவாகலாம் மேலும் தென் கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழைக்கும் வாய்ப்புகள் உண்டு இவைத்தவிர்த்து தமிழக வட உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான  தகவல்களை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் விரிவாக குரல் பதிவு செய்கிறேன்.

தற்சமயம் அந்த #தீவிர_காற்றழுத்த_தாழ்வு_பகுதி யானது மேற்குவங்கத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ளது நாம் எதிர்பார்த்து இருந்தது போல இது மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்து வரக்கூடிய நாட்களில் #ஒடிசா , #மேற்கு_வங்கம் , #சத்தீஸ்கர் , #மத்திய_பிரதேசம் உட்பட இந்தியாவின் மத்திய பகுதிகளில் ஆங்காங்கே பருவமழை மீண்டும் வீரியம் அடைய உதவ உள்ளது.நமது தமிழகத்தை பொறுத்தவரையில் #கேரளாவில் அடுத்து வரக்கூடிய நாட்களிலும் பருவமழை வீரியம் குறைந்து காணப்படும் என்பதால் நமக்கு உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அவ்வப்பொழுது அங்கும் இங்குமாக இடியுடன் கூடிய வெப்பசலன மழை மாலை மற்றும் இரவு நேரங்களில் பதிவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் #புதுச்சேரி நகரில் 10 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
கயத்தாறு (தூத்துக்குடி மாவட்டம்) -  69 மி.மீ
வானமாதேவி (கடலூர் மாவட்டம்) - 47 மி.மீ
சோழவந்தான் (மதுரை மாவட்டம்) -  41 மி.மீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு மாவட்டம்) -  40 மி.மீ
வாடிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 40 மி.மீ
ஆண்டிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 40 மி.மீ
தட்டைங்கார்ப்பேட்டை (திருச்சி மாவட்டம்) - 40 மி.மீ
பஞ்சபட்டி (கரூர் மாவட்டம்) -  39 மி.மீ
வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம்) -  35 மி.மீ
உசிலம்பட்டி (மதுரை மாவட்டம்) - 33 மி.மீ
குறிஞ்சிப்பாடி (கடலூர் மாவட்டம்) -  32 மி.மீ
கமுதி (ராமநாதபுரம் மாவட்டம்) -  30 மி.மீ
ஸ்ரீபெரம்பத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) -  26 மி.மீ
கடம்பூர் (தூத்துக்குடி மாவட்டம்) - 26 மி.மீ
முதுகுளத்தூர் (ராமநாதபுரம் மாவட்டம்) -  26 மி.மீ
குப்பனம்பட்டி (மதுரை மாவட்டம்) - 25 மி.மீ
சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 25 மி.மீ
சாத்தையாறு  (மதுரை மாவட்டம்) - 24 மி.மீ
கடலூர் (கடலூர் மாவட்டம்) - 23 மி.மீ
தேவிமங்கலம் (திருச்சி மாவட்டம்) - 23 மி.மீ
மணியாச்சி (தூத்துக்குடி மாவட்டம்) - 23 மி.மீ
இளையாங்குடி (சிவகங்கை மாவட்டம்) -  23 மி.மீ
முசிறி (திருச்சி மாவட்டம்) - 22 மி.மீ
சிவகங்கை (சிவகங்கை மாவட்டம்) - 22 மி.மீ
எட்டையபுரம் (தூத்துக்குடி மாவட்டம்) - 21மி.மீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர் மாவட்டம்) - 20 மி.மீ
மானாமதுரை (சிவகங்கை மாவட்டம்) -  20 மி.மீ
வாட்ராப் (விருதுநகர் மாவட்டம்) -  19 மி.மீ
வேங்கூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 18 மி.மீ
திருபுவனம் (சிவகங்கை மாவட்டம்) - 16 மி.மீ
பேரையூர் (மதுரை மாவட்டம்) - 16 மி.மீ
சிறுக்குடி (திருச்சி மாவட்டம்) -  16 மி.மீ
புலிவலம் (திருச்சி மாவட்டம்) - 15 மி.மீ
விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 15 மி.மீ
கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர் மாவட்டம்) - 14 மி.மீ
குளித்தலை (கரூர் மாவட்டம்) - 14 மி.மீ
திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 14 மி.மீ
செய்யூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 14 மி.மீ
துறையூர் (திருச்சி மாவட்டம்) - 12 மி.மீ
உதகமண்டலம் (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
மணப்பாறை (திருச்சி மாவட்டம்) - 11 மி.மீ
வடக்குத்து (கடலூர் மாவட்டம்) -  11 மி.மீ
குடிதாங்கி (கடலூர் மாவட்டம்) - 10 மி.மீ
சோத்துப்பாறை அணை (தேனி மாவட்டம்) - 10 மி.மீ
அகரம் சிகூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 10 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) -  9 மி.மீ
குந்தா பாலம் (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
விருதுநகர் (விருதுநகர் மாவட்டம்) - 8 மி.மீ
காரியபட்டி (விருதுநகர் மாவட்டம்) - 7 மி.மீ
மதுரை விமானநிலையம் (மதுரை மாவட்டம்) -  7 மி.மீ
ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம்) -  6 மி.மீ
ஆண்டிப்பட்டி (தேனி மாவட்டம்) - 6 மி.மீ
திருமங்கலம் (மதுரை மாவட்டம்) - 6 மி.மீ
ராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம்) - 6 மி.மீ
திருநெல்வேலி (நெல்லை மாவட்டம்) - 6 மி.மீ
கொத்தவச்சேரி(கடலூர் மாவட்டம்) - 6 மி.மீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 6 மி.மீ
தோகைமலை (கரூர் மாவட்டம்) - 6 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 5 மி.மீ
திருப்பூர் வடக்கு (திருப்பூர் மாவட்டம்) - 5 மி.மீ
சங்கரன்கோவில் (தென்காசி மாவட்டம்) - 5 மி.மீ
திருவலங்காடு (திருவள்ளூர் மாவட்டம்) - 5 மி.மீ
ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்) - 5 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com


5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக