21-08-2020 நேரம் காலை 11:00 மணி இன்று காலை நிலவரப்படி #மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.81 அடியாக உயர்ந்து உள்ளது மேலும் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 27,845 கண அடியாக உள்ளது இதே சூழல் தொடர்ந்தால் இன்றே #மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டிவிடும்.இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் #மஹார்ஷ்டிரம் மற்றும் #கர்நாடக மாநில கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே சிறப்பான மழை பதிவாகலாம் அதே போல #சத்தீஸ்கர் மற்றும் #மத்திய_பிரதேச மாநிலங்களில் ஆங்காங்கே கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகம் அம்மாநிலங்களில் குறிப்பாக #மத்திய_பிரேதேச (#Madhya_Pradesh) மாநிலத்தின் பல இடங்களில் அடுத்து வரக்கூடிய நாட்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரையில் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று அடுத்த 24 மணி நேரத்தில் சற்று அதிகமான உள் மற்றும் வட கடலோர மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே வெப்பசலன மழை பதிவாக தொடங்கலாம்.அடுத்து வரக்கூடிய நாட்களில் தமிழகத்தில் பரவலான வெப்பசலன மழை பதிவாகவும் வாய்ப்புகள் உண்டு.#சென்னை மாநகர் பகுதிகளிலும் அடுத்து வரக்கூடிய நாட்களில் சில நாட்கள் பரவலான வெப்பசலன மழை பதிவாகும் என எதிர்பார்க்கலாம்.
அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை அடுத்த சில மணி நேரங்களில் பிற்பகல் வாக்கில் நமது Youtube பக்கத்தில் விரிவாக பதிவிடுகிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
==========================
தானிஷ்பேட் (சேலம் மாவட்டம்) - 15 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 6 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம்) - 4 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
கீழ் கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
கரியாக்கோவில் அணை (சேலம் மாவட்டம்) - 2 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
நடுவட்டம்(நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
பந்தலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 1 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 1 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com