20-08-2020 நேரம் பிற்பகல் 1:50 மணி தற்சமயம் அந்த #ஆழ்ந்த_காற்றழுத்த_தாழ்வு_பகுதி (#Well_Marked_Low_pressure_area) யானது தற்சமயம் #ஒடிசா வின் மேற்கு பகுதிகளில் நிலத்தில் நிலைக்கொண்டு இருப்பதை காண முடிகிறது இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் #ஒடிசா , #சத்தீஸ்கர் , #ஜார்கண்ட் ,#வடக்கு_ஆந்திரம் மற்றும் #தெலுங்கானா மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆங்காங்கே கனமழை பதிவாக வாய்ப்புகள் உண்டு மேலும் இதன் தாக்கத்தால் மேற்கு திசை காற்றின் வீரியம் #மஹார்ஷ்டிரம் மற்றும் #கர்நாடக மாநிலங்களில் அதிகரித்து இருப்பதால் அம்மாநில #மேற்கு_தொடர்ச்சி_மலை மற்றும் கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே சிறப்பான மழை பதிவாகலாம்.மேலும் #கர்நாடக மாநில #காவிரி_நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இன்றும் நல்ல மழை பதிவாகலாம் #மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது.தென் மாவட்ட அணைகள் உட்பட தமிழக முக்கிய அணைகளின் இன்றைய நிலவரத்தைக் காண - http://www.tamilnaduweather.com/2020/08/20082020-tamilnadu-major-dams-current.html
தமிழகத்தை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் நேற்றைய சுழல்களே தொடரும் அங்கும் இங்குமாக ஒரு சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாகலாம் #மதுரை மாவட்ட வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய #திண்டுக்கல் மாவட்ட தெற்கு பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பதிவாகலாம் அதே போல #ஈரோடு மாவட்ட வடக்கு பகுதிகளிலும் சில இடங்களில் மழை பதிவாகலாம் மேலும் விரிவான தகவல்களை இன்னும் சற்று நேரத்தில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.
செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் அல்லது அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அல்லது ஒரு புயல் உருவானால் ஆச்சரியம் கொள்ளாதீர்கள்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=======================
பந்தலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 27 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
புதுவேட்டக்குடி (பெரம்பலூர் மாவட்டம்) - 3 மி.மீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 2 மி.மீ
ஒக்கேனக்கல் (தர்மபுரி மாவட்டம்) - 2 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com