18-08-2020 நேரம் காலை 10:00 மணி நாம் நேற்று எதிர்பார்த்து இருந்தது போல கடந்த 24 மணி நேரத்தில் உள் மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாகியிருக்கிறது #சென்னை மாநகரின் ஒரு சில இடங்களில் கூட லேசான மழை பதிவாகியிருப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்று இருக்கின்றன 5 மி.மீ க்கும் குறைவான அளவு பதிவாகியிருக்கும் மழை அளவுகளும் கிடைபெற்று இருக்கின்றன இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பசலன மழை பதிவாகலாம்.நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று அதனை விட அதிக உள் மாவட்ட பகுதிகளில் அங்கும் இங்குமாக வெப்பசலன மழை பதிவாகும் இது தொடர்பான அதாவது எந்தெந்த பகுதிகளில்/மாவட்டங்களில் வெப்பசலன மழை அடுத்த 24 மணி நேரத்தில் பதிவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்கிற தகவல்களை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் விரிவாக குரல் பதிவு செய்கிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=====================
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 46 மி.மீ
பந்தலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 24 மி.மீ
தளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 20 மி.மீ
பாடந்துரை பிரையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
செருமுள்ளி (நீலகிரி மாவட்டம்) - 13 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 10 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 6 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
மேட்டூர் அணை (சேலம் மாவட்டம்) - 3 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம்) - 3 மி.மீ
வானூர்(விழுப்புரம் மாவட்டம்) - 3 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 3 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 3 மி.மீ
ஜமுனமரத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 2 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 2 மி.மீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை மாநகர்) - 2 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 2 மி.மீ
அம்பத்தூர் (சென்னை மாநகர்) - 1 மி.மீ
பொள்ளாச்சி (கோவை மாவட்டம்) - 2 மி.மீ தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 1 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com