17-08-2020 நேரம் பிற்பகல் 1:40 மணி இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக வட மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு குறிப்பாக #ஈரோடு மாவட்ட வடக்கு பகுதிகள் #சேலம் மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம் #பெங்களூரு சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை பதிவாகலாம் இதன் தாக்கத்தால் #கர்நாடக மாநில எல்லையை ஒட்டிய #கிருஷ்ணகிரி மற்றும் #தர்மபுரி மாவட்டத்தின் சில இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகலாம் அதே போல #வேலூர் மற்றும் #திருப்பத்தூர் மாவட்ட சில இடங்களிலும் #தெற்கு_ஆந்திராவை ஒட்டிய #திருவள்ளுர் மாவட்ட மேற்கு பகுதிகளிலும் சில இடங்களில் மழை பதிவாகலாம்.
#நீலகிரி மாவட்ட மேற்கு பகுதிகள் உட்பட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் ஆங்காங்கே மிதமான மழை அடுத்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகலாம்.#கோவை மாவட்டத்தின் சமவெளி பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் சாரல் அல்லது தூரல் பதிவாகலாம்.#கோவை மாநகரில் சாரல் பதிவானால் மகிழ்ச்சி கொள்ளுங்கள். பொதுவாக இன்று #கோவை மாநகரில் வானம் மேக மூட்டதுடன் காணப்படலாம்.
இன்று அடுத்த 24 மணி நேரத்தில் #மஹாரஷ்டிர மற்றும் #கர்நாடக மாநில கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சிறப்பான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.#கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை அடுத்த 24 மணி நேரத்தில் பதிவாகலாம்.
19-08-2020 ஆகிய நாளை மறுநாள் வடக்கு வங்கக்கடல் பகுதியில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புகள் உள்ளது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
======================
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 40 மி.மீ
பந்தலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
அப்பர்பவானி (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 4 மி.மீ
பாடந்துரை பிரையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
செருமுல்லி (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 3 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 1 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 1 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com