16-08-2020 நேரம் பிற்பகல் 2:00 மணி தற்சமயம் நாம் எதிர்பார்த்து இருந்தது போல தெற்கு #ஜார்கண்ட் பகுதிகளில் #குறைந்த_காற்றழுத்த_தாழ்வு_பகுதி நிலவி வருகிறது இதன் காரணமாக இன்று அடுத்த 24 மணி நேரத்தில் #மஹாரஷ்டிர மற்றும் #கர்நாடக மாநில கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சிறப்பான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.#கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை அடுத்த 24 மணி நேரத்தில் பதிவாகலாம்.
தமிழகத்தை பொறுத்தவரையில் இன்று அடுத்த 24 மணி நேரத்தில் நான் நேற்றைய பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல சூழல்கள் சிறப்பாக அமையும் பட்சத்தில் #திருவள்ளூர் மாவட்டத்தில் ஆங்காங்கே சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாகலாம் #சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளிலும் சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.#சென்னை_மாநகர் பகுதிகளை பொறுத்தவரையில் "Hit or Miss" ரகம் தான் மாநகரின் சில இடங்களிலும் மழை பதிவானால் மகிழ்ச்சி கொள்ளுங்கள் இவைத்தவிர்த்து கர்நாடக மாநிலத்தை ஒட்டிய தமிழக மாவட்ட பகுதிகளான #ஈரோடு மாவட்ட வடக்கு பகுதிகள் , #சேலம் மாவட்ட மேற்கு பகுதிகள் மற்றும் #கிருஷ்ணகிரி , #தர்மபுரி மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகலாம்..#திண்டுக்கல் மாவட்டத்தை ஒட்டிய வடக்கு #மதுரை மாவட்ட பகுதிகளிலும் சூழல்கள் சாதகமாக தான் உள்ளன.இவை அல்லாது அங்கும் இங்குமாக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாகலாம்.
#நீலகிரி மாவட்ட மேற்கு பகுதிகள் உட்பட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் ஆங்காங்கே மிதமான மழை அடுத்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகலாம்.#கோவை மாவட்டத்தின் சமவெளி பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் சாரல் அல்லது தூரல் பதிவாகலாம்.#கோவை மாநகரில் சாரல் பதிவானால் மகிழ்ச்சி கொள்ளுங்கள். பொதுவாக இன்று #கோவை மாநகரில் வானம் மேக மூட்டதுடன் காணப்படலாம்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
======================
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 29 மி.மீ
பந்தலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
பாடந்துரை பிரையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
செருமல்லி (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 1 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 1 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com