15-08-2020 நேரம் பிற்பகல் 1:50 மணி #தோழர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த விடுதலை திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.நேற்றைய பதிவில் நான் குறிப்பிட்டு இருந்த வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த அந்த #குறைந்த_காற்றழுத்த_தாழ்வு_பகுதி யானது தற்சமயம் தீவிரமடைந்து ஒரு #ஆழ்ந்த_காற்றழுத்த_தாழ்வு_பகுதி (#Well_marked_low_pressure_area) என்கிற நிலையில் ஓடிசாவின் கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைக்கொண்டு உள்ளது மேலும் நாம் எதிர்பார்த்தது போல ஓடிசாவின் கடலோர பகுதிகளின் வழியே நிலப்பகுதிக்குள் ஊடுருவி வருகிறது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மேற்கு - வட மேற்கு திசையில் நிலப்பகுதிகளுக்குள் நகர்ந்து செல்லும்.அதனுடைய நகர்வுகள் தொடர்பாக ஏற்கனவே அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களில் விரிவாக பதிவிட்டு இருக்கிறேன் அதனை காண - http://www.tamilnaduweather.com/2020/08/14082020-upcoming-week-weatger-overlook.html
தென் மாவட்ட அணைகளின் தற்போதைய நிலவரம் உட்பட தமிழகத்தின் முக்கிய அணைகளின் தற்போதைய நிலவரத்தை அறிய - http://www.tamilnaduweather.com/2020/08/15082020-tamilnadu-major-dam-storage.html
தமிழகத்தின் அடுத்த 24 மணி நேர வானிலையை பொறுத்தவரையில் நேற்றைய சூழல்களே இன்றும் தொடரும் இன்று #திருவள்ளுர் மாவட்டத்தின் சில இடங்களில் மழை பதிவாகலாம் இன்று அல்லது நாளை #சென்னை மாநகரின் சில இடங்களிலும் மழை பதிவாகும் என நம்பலாம் அதற்கான வாய்ப்புகளும் உண்டு மேலும் 16-08-2020 ஆகிய நாளை உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக தொடங்கலாம் 20-08-2020 ஆம் தேதிக்கு பிறகு வரக்கூடிய நாட்களில் வெப்பசலன மழை உள் மாவட்டங்களில் தீவிரமடைய வாய்ப்புகள் உண்டு.
இன்றும் #மஹார்ஷ்டிரம் மற்றும் வடக்கு கர்நாடக மாநில கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சிறப்பான மழை பதிவாகலாம்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=======================
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 66 மி.மீ
பாடந்துரை பிறையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 1 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com