13-08-2020 நேரம் இரவு 8:20 மணி சற்று முன்பு #சோழவரம் , #பாடியநல்லூர் சுற்றுவட்டப் பகுதிகளில் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன தற்சமயம் அதன் அருகே #வீச்சுர் மற்றும் #வல்லூர் சுற்றுவட்டப் பகுதிகளில் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன சில மணி நேரங்களுக்கு முன்பு #மேலூர் அருகிலும் #போடட்டூர்பேட் சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வந்தன.
இன்று காலை நிலவரப்படி #பெரம்பிக்குளம் (#Parambikulam) அணையின் நீர்மட்டம் 61.35 அடியாக அதிகரித்து இருந்தது மேலும் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 4566 கண அடியாக இருந்தது அதிகபட்சமாக 72 அடி வரை அதில் நீரை சேமிக்க இயலும்.அதேபோல #ஆழியாறு (#Azhiyar) அணையின் நீர்மட்டம் ஆனது 105.6 / 120 அடியாக இருந்தது.
அதேபோல பிற்பகல் நிலவரப்படி #மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.42 அடியாக இருந்தது மேலும் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 18000 கண அடியாக இருந்தது அதே போல் #பவானி_சாகர் அணையின் நீர்மட்டம் 101.65 அடியாக இருந்தது.
தென்மாவட்டங்களை பொறுத்தவரையில் #பாபநாசம் அணையின் நீர்மட்டம் 105.65 அடியாக உயர்ந்து உள்ளது நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று 5 அடி உயர்ந்துள்ளது அதே போல #சேர்வலாறு_அணை யின் நீர்மட்டம் 128.12 அடியாகவும் #மணிமுத்தாறு_அணை யின் நீர்மட்டம் 73.65 அடியாகவும் உள்ளது.
மறுபுறம் நாம் எதிர்பார்த்து இருந்தது போல் #மஹாராஷ்டிர மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் மழையின் அளவு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இன்று காலை 8:30 மணி வரையில் பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=====================
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 6 மி.மீ
மேல் நிரார் (கோவை மாவட்டம்) - 5 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 4 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 4 மி.மீ சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 4 மி.மீ
பொன்னை அணை (வேலூர் மாவட்டம்) - 4 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 3 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 2 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 1 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#puducherry_weather
#tamilnaduweather.com