அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம்?
==========================
14-08-2020 நேரம் காலை 9:50 மணி நாம் எதிர்பார்த்து இருந்ததைப் போல தற்சமயம் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் #ஒடிசா , #மேற்கு_வங்கத்தை ஒட்டி ஒரு குறைந்த #காற்றழுத்த_தாழ்வு_பகுதி நிலவி வருகிறது மேலும் கடந்த வாரம் நாம் எதிர்பார்த்து இருந்ததை போல #தென்மேற்கு_பருவமழை சிறப்பாக #மேற்கு_தொடர்ச்சி_மலை பகுதிகளில் பதிவாகியிருக்கிறது இந்த மாத தொடக்கத்தில் எழுதிய அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களை காண - https://www.facebook.com/1611990775491571/posts/3462422053781758/
தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் எப்பொழுது வெப்பசலன மழை தீவிரமடையலாம்
=======================
தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களை பொறுத்தவரையில் பரவலான #வெப்பசலன_மழை க்கு நாம் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும் அதுவரையில் அங்கும் இங்குமாக ஒரு சில இடங்களில் அவ்வப்பொழுது மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பதிவாகும் 18-08-2020 அல்லது 19-08-2020 ஆம் தேதிகளின் வாக்கில் உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் வெப்பசலன மழையின் அளவு அதிகரிக்க தொடங்குவதை காணலாம் 20-08-2020 அல்லது 21-08-2020 ஆம் தேதிகளின் வாக்கில் தமிழக உள் மற்றும் #வட_கடலோர மாவட்டங்களில் மீண்டும் வெப்பசலன மழை தீவிரமடையும் #பரவலான_வெப்பசலன மழையும் அக்காலங்களில் பதிவாகலாம்.சுருக்கமா சொல்லனும்னா இந்த மாத இறுதி 10 நாட்களில் #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட தமிழகத்தில் சிறப்பான வெப்பசலன மழை உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே அவ்வப்பொழுது பதிவாகலாம்.
அடுத்து வரக்கூடிய நாட்களுக்கான வானிலை
==============================
நான் மேலே குறிப்பிட்டு இருக்கும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்து வரக்கூடிய நாட்களில் ஒடிசா அல்லது மேற்கு வங்கத்தின் வழியாக ஊடுருவி மெல்ல மெல்ல மேற்கு - வட மேற்கு திசையில் இந்தியாவின் மத்திய பகுதிகளில் நகர்ந்து செல்லும் இதன் காரணமாக அடுத்து வரக்கூடிய நாட்களில் #ஒடிசா ,#மேற்குவங்கம் , #தெலுங்கானா , #வடக்கு_ஆந்திரம் ,#மஹார்ஷ்டிரம் , #மத்திய_பிரதேசம் மற்றும் #சத்தீஸ்கர் மாநிலம் பலனடையும் மேலும் அது அவ்வாறு மேற்கு நோக்கி நகர்கையில் தென்மேற்கு திசை காற்றின் வீரியம் அதிகரிக்கிறது இதன் காரணமாக #மஹார்ஷ்டிரம் , #கோவா மற்றும் #கர்நாட மாநில கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அடுத்து வரக்கூடிய வாரத்தில் மீண்டும் மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது குறிப்பாக #மஹாராஷ்டிர மாநில கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அடுத்து வரக்கூடிய நாட்களில் மீண்டும் ஆங்காங்கே கனமழை முதல் மிக கனமழை வரையில் பதிவாகலாம் #கேரள மாநிலத்தை பொறுத்தவரையில் கணமழைக்கான வாய்ப்புகள் இல்லை இதற்கு முக்கிய காரணம் #பூமத்திய_ரேகை (#Equator) அருகே இருக்கும் மத்திய மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் அழுத்தம் குறைய தொடங்கியிருப்பதே ஆகும்.
ஒவ்வொரு நாளும் அடுத்த 24 மணி நேர வானிலை தகவல்களை பிற்பகலில் பதிவிடுகிறேன்.
Predicted by
#Emmanuel_Paul_Antony
#Puducherry_weather
#tamilnaduweather.com