11-08-2020 நேரம் காலை 10:50 மணி #மேட்டூர் அணையின் நீரமட்டம் 95 அடியாக அதிகரித்துள்ளது இன்று காலை நிலவரப்படி 95.1 அடியாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் இருந்தது மேலும் நீர் வரத்தானது வினாடிக்கு 80,000 கண அடியாக இருந்தது கடந்த 48 மணி நேரத்தில் அணையின் நீர்மட்டம் கிட்டத்தட்ட 20 ஆடி உயர்ந்துள்ளது மேலும் நாம் எதிர்பார்த்த படி #கேரளா வில் கடந்த சில நாட்களாக பதிவாகி வந்த கனமழை குறைய தொடங்கியுள்ளது இனி அடுத்து வரக்கூடிய நாட்களிலும் கேரளாவில் கணமழைக்கான வாய்ப்புகள் இல்லை வழக்கம் போல தென்மேற்கு பருவமழை வீரியம் குறைந்து இருக்கும் காலகட்டத்தில் எத்தகைய சூழல் நிலவுமோ அதே சுழல்களே #கேரள மாநிலத்தில் தொடரும் மற்றப்படி அச்சப்படும் அளவுக்கான சூழல் எதுவும் தற்சமயம் இல்லை.நிறைந்திருக்கும் அணை களின் நீர் வழிப்பாதைகளில் வசிக்கும் மக்கள் அம்மாநில அரசின் வழிகாட்டுதல்களின் படி நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இன்று அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு இது தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 37 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 37 மி.மீ
மேல் நிரார் (கோவை மாவட்டம்) - 34 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 27 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 26 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 22 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 21 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 20 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 18 மி.மீ
கீழ் நிரார் (கோவை மாவட்டம்) - 14 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 14 மி.மீ
தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம்) - 9 மி.மீ
சேரங்கோடு(நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) - 8 மி.மீ
சோழிங்கநல்லூர் (சென்னை மாவட்டம்) - 6 மி.மீ
பந்தலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 6 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 5 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 5 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.