இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

August 10 , 2020 Today's Weather Forecast in Tamil | Last 24 Hours Complete rainfall data of tamilnadu and Puducherry

0

10-08-2020 நேரம் காலை 10:10 மணி கடந்த 24 மணி மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மற்றும் தமிழக உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பதிவாகியிருக்கின்றன 11-08-2020 ஆகிய நாளை முதல் #கேரளா வில் #தென்மேற்கு_பருவமழை குறைய தொடங்கலாம்.நாம் எதிர்பார்த்து இருந்தது போல ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை 10 நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் சிறப்பான மழையை பதிவு செய்து இருக்கிறது.இந்த மாதம் தொடங்குகையில் அதாவது ஜூலை மாத இறுதி வரை இயல்புக்கும் குறைவான அளவு மழை பெற்று இருந்த மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கேரள மாநில பகுதிகள் தற்சமயம் கடந்த 8 நாட்களில் இயல்புக்கும் அதிக அளவு மழை பெற்ற மாவட்டங்கள் பட்டியலில் இணைந்து விட்டது.அனைகளின் நீர்மட்டமும் விறுவிறுவென உயர்ந்து விட்டது.தமிழகத்தில் வெப்பசலன மழை அதற்கு அடுத்து வரக்கூடிய வாரத்தில் அதிகரிக்க தொடங்கலாம்.அடுத்து வரக்கூடிய வாரத்திற்காண வானிலை தகவல்களை இன்று அல்லது நாளை பதிவிடுகிறேன்.தென் மாவட்ட அனைகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர தொடங்கியிருக்கிறது #பெருஞ்சாணி_அணை யின் நீர்மட்டம் 58.3 அடியாக இன்று காலை நிலவரப்படி இருந்தது அதேபோல் #பேச்சிப்பாரை அணையின் நீர்மட்டம் 32.85 அடியாக இருந்தது மேலும் #பாபநாசம் அணையின் நீர்மட்டம் 97 அடியாகவும் #சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 129.66 அடியாகவும் #மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 72.6 அடியாகவும் உள்ளது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
===========================
தேவாலா (நீலகிரி மாவட்டம்) -  121 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) -  99 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 94 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 80 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) - 74 மி.மீ
பந்தலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) -  72 மி.மீ
தானிஷ்பேட் (சேலம் மாவட்டம்) - 71 மி.மீ
அலக்கரை எஸ்டேட் , குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 62 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 58 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 49 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 47 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 46 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) -  44 மி.மீ
ஏத்தாபூர் (சேலம் மாவட்டம்) - 36 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 35 மி.மீ
பர்லியார் (நீலகிரி மாவட்டம்) -  35 மி.மீ
சித்தாறு அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -  30 மி.மீ
சேலம் (சேலம் மாவட்டம்) - 27 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) -  25 மி.மீ
ஒக்கேனக்கல் (தர்மபுரி மாவட்டம்) -  23 மி.மீ
பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம்) - 22 மி.மீ
ஆத்தூர் (சேலம் மாவட்டம்) - 21 மி.மீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம்) - 20 மி.மீ
வாழப்பாடி (சேலம் மாவட்டம்) -  20 மி.மீ
ராதாபுரம் (நெல்லை மாவட்டம்) - 20 மி.மீ
குளித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) -  20 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) -  19 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) -  19 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -  18 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) -  18 மி.மீ
உத்தமபாளையம் (தேனி மாவட்டம்) - 16 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -  16 மி.மீ
எடப்பாடி (சேலம் மாவட்டம்) - 16 மி.மீ
கரியாக்கோவில் அணை (சேலம் மாவட்டம்) - 16 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம்) -  16 மி.மீ
ஆனைமடுவு அணை (சேலம் மாவட்டம்) - 15 மி.மீ
மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்) - 15 மி.மீ
பிளவாக்கல் அணை (விருதுநகர் மாவட்டம்) -  15 மி.மீ
மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம்) - 14 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளூர் மாவட்டம்) - 14 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -  14 மி.மீ
கொட்டாரம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 13 மி.மீ
இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 13 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) -  13 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) -  13 மி.மீ
கண்ணிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) -  12 மி.மீ
சாத்தையாறு அணை (மதுரை மாவட்டம்) - 12 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
திண்டுக்கல் (திண்டுக்கல் மாவட்டம்) - 11 மி.மீ
பாடந்துரை பிரையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) -  11 மி.மீ
அம்பாசமுத்திரம் (தென்காசி மாவட்டம்) -  10 மி.மீ
மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம்) - 10 மி.மீ
தளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
தம்மம்பட்டி (சேலம் மாவட்டம்) - 10 மி.மீ
மேமாத்துர்(கடலூர் மாவட்டம்) - 10 மி.மீ
சிவகிரி (விருதுநகர் மாவட்டம்) - 10 மி.மீ
பென்னாகரம் (தர்மபுரி மாவட்டம்) - 9 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 9 மி.மீ
செருமுல்லி (நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
களியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 8 மி.மீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி மாவட்டம்) -  8 மி.மீ
பண்ருட்டி (கடலூர் மாவட்டம்) - 8 மி.மீ
சங்கரன்கோவில் (தென்காசி மாவட்டம்) -  8 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) -  7 மி.மீ
செங்கோட்டை (தென்காசி மாவட்டம்) - 7 மி.மீ
சிட்டாம்பட்டி (மதுரை மாவட்டம்) - 6 மி.மீ
கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 6 மி.மீ
குளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம்) -  6 மி.மீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 6 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ கிண்ணகோரை(நீலகிரி மாவட்டம்) -  6 மி.மீ
சாத்தான்குளம் (தூத்துக்குடி மாவட்டம்) - 6 மி.மீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 5 மி.மீ
போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்) - 5 மி.மீ
தென்காசி (தென்காசி மாவட்டம்) -  5 மி.மீ
விரகனூர் (சேலம் மாவட்டம்) - 5 மி.மீ
மணிமுத்தாறு அணை (நெல்லை மாவட்டம்) - 5 மி.மீ
மஞ்சளாறு அணை (தேனி மாவட்டம்) - 5 மி.மீ
நாங்குநேரி (நெல்லை மாவட்டம்) - 5 மி.மீ
கங்கவள்ளி (சேலம் மாவட்டம்) -  5 மி.மீ
மயிலாப்பூர் (சென்னை மாநகர்) -  5 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com


5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக