11-08-2020 நேரம் இரவு 9:10 மணி வெப்பசலன மழை மேகங்கள் #காரைக்கால் பகுதிகளிலும் மழையை பதிவு செய்ய தொடங்கிவிட்டன மேலும் தற்சமயம் #திருவாரூர் மாவட்டம் #மன்னார்குடி , #உள்ளிக்கோட்டை சுற்றுவட்டப் பகுதிகளில் சிறப்பான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன நாம் கடந்த பதிவில் தெரிவித்து இருந்த அந்த #சென்னை மாநகரின் புறநகர் பகுதி மழை மேகங்கள் #சென்னை மாநகரின் சில இடங்களிலும் மழையை பதிவு செய்து இருக்கிறது தற்சமயம் #அடையாறு , #திருவொற்றியூர் சுற்றுவட்டப் பகுதிகளில் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #திருவந்திபுரம் , #வானமாதேவி சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #கடலூர் சுற்றுவட்டப் பகுதிகளில் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.மழை மேகங்கள் கடல் பகுதியை அடைந்து விலகி செல்ல முற்படுகையில் #சென்னை மாநகரில் அடுத்த சில மணி நேரங்களில் அங்கும் இங்குமாக சாரல் தூரல் பதிவாகலாம் தற்சமயமும் #சென்னை மாநகரில் ஆங்காங்கே சாரல் , தூரல் மற்றும் மிதமான மழை பதிவாகி வரலாம்.
இன்னும் சற்று நேரத்தில் #கடலூர் பகுதியை ஒட்டிய #புதுச்சேரி மாவட்ட பகுதிகளிலும் சில இடங்களில் மழை பதிவாகலாம் அதே போல #சென்னை மாநகரின் தெற்கு புறநகர் மற்றும் அதனை ஒட்டிய கடலோர பகுதிகளிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை அடுத்த சில மணி துளிகளில் பதிவாக வாய்ப்புகள் உண்டு மேலும் #திருவாரூர் மாவட்ட தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய #நாகை மாவட்ட தெற்கு பகுதிகளிலும் அடுத்த சில மணி நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை பதிவாகலாம்.அங்கும் இங்குமாக தான் மழை பதிவாகும் உங்கள் பகுதியில் மழை பதிவானால் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
இரவு சில பகுதிகளின் மழை அளவுகளுடன் குரல் பதிவு செய்கிறேன்🙏