இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

09.08.2020 Todays Tamilnadu Dam Storage level and flow data | Kerala Flood | Low pressure in bay | Active Monsoon

0

 09-08-2020 நேரம் பிற்பகல் 3:20 மணி வடமேற்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு ஒடிசா அதனை ஒட்டிய மேற்கு கங்கை நதிக்கரை மேற்கு வங்கப்பகுதிகளில் நிலவி வரும் #குறைந்த_காற்றழுத்த_தாழ்வு_பகுதி யின் காரணமாக இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் #கேரளா வில் கனமழை பதிவாக வாய்ப்புகள் உண்டு தமிழக #மேற்கு_தொடர்ச்சி_மலை பகுதிகளிலும் சிறப்பான மழை பதிவாகலாம் இது தொடர்பாக சில மணி நேரங்களுக்கு முன்பாக நமது Youtube பக்கத்தில் விரிவான குரல் பதிவை பதிவிட்டு இருக்கிறேன்.

தற்சமயம் #நெல்லை மாவட்டம் #ராதாபுரம் #கூடங்குளம் , #பாபநாசம் சுற்றுவட்டப் பகுதிகள் என #நெல்லை மற்றும் #கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பதிவாகி வருவதை அறிய முடிகிறது.#கேரளாவில் #Ponmudi ,#kakkayam (#Kuttiyadi) ,  #poringalkuthu , #kallarkutty , #kallar ,#eraiyrattayar ,#lower_periyar , #Moozhiyar ஆகிய அணைகள் நிறையும் தருவாயில் உள்ளன மேற்கண்ட அணைகள் அருகே இருக்கும் பகுதிகளுக்கு சுகப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டு இருக்கிறது மேலும் #Idukki ,#Idamalayar போன்ற பெரிய அணைகளும் 50% சதவிகிதற்கும் அதிகமான கொள்ளளவை அடைந்து விட்டன.#ஆழப்புழா மாவட்டத்தில் உதவி எண்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன 0477 2236831

தமிழக அணைகளை பொறுத்தவரையில் பிற்பகல் வரையில் #பவானி_சாகர் அணையின் நீர்மட்டமானது 99.74 அடியாக இருந்தது அதே போல மேட்டூர் அணையின் நீர்மட்டமும் 75 அடியை கடந்து விட்டது #மேட்டூர்_அணை க்கான நீர்வரத்து வினாடிக்கு 61197 கன அடியாக உள்ளது.அதேபோல #பெரியார்_அணை யின் நீர்மட்டம் 135.25 அடியை எட்டியுள்ளது.

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக