06-08-2020 நேரம் பிற்பகல் 2:30 நான் கடந்த காணொளியின் வாயிலாக Youtube பக்கத்தில் அடுத்த 24 மணி நேர வானிலையில் சில மணி நேரங்களுக்கு முன்பாக குறிப்பிட்டு இருந்தது போல - https://youtu.be/HnwLA2-R5lo #நீலகிரி மாவட்ட மேற்கு பகுதிகள் மற்றும் #வால்பாறை சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட தமிழக மேற்கு தொடற்ச்சி மழை பகுதிகளில் ஆங்காங்கே கனமழை தொடர்கிறது #நீலகிரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை பொறுத்தவரையில் இது தொடர்ச்சியான 4 வது நாள் கனமழை #அவலாஞ்சி சுற்றுவட்டப் பகுதிகளில் கடந்த 72 மணி நேரத்தில் 1191 மி.மீ அதாவது கிட்டத்தட்ட 120 செ.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.
நான் காலையில் பதிவிட்டு இருந்தது #ஈரோடு மாவட்டம் #பவானி_சாகர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது பிற்பகல் வரை அணையின் நீர்மட்டம் கிட்டத்தட்ட 92 அடியாக உள்ளது நீர்வரத்து 37,500 கன அடியாக உயர்ந்துள்ளது இதே நிலை தொடர்ந்தால் அடுத்த 3 நாட்களில் அணை முழு கொள்ளளவை எட்டிவுடும்.அதேபோல #மேட்டூர் அணையில் நீர்மட்டம் 64.20 அடியாக உள்ளது இது அதன் முழு அளவுடன் ஒப்பிடுகையில் 53.5% சதவிகிதம் ஆகும் இந்நிலையில் #கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து சிறப்பான மழை பதிவாகி வருகிறது #கபினி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.நேற்று ஒரே நாளில் #சோலையாறு_அணை யின் நீர்மட்டம் 21 அடி உயர்ந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மட்டுமல்லாது நாம் எதிர்பார்த்தது போல #கன்னியாகுமரி மற்றும் #நெல்லை மாவட்ட சமவெளி பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பதிவாகி வருகிறது.
சற்று முன்பு வரை
திருப்பதிசாரம் - 14 மி.மீ
நாகர்கோயில் - 8 மி.மீ
கண்ணியாகுமரி - 5 மி.மீ
நாளை காலையும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சில 300 மி.மீ க்கும் அதிகமான மழை பதிவாகியிருக்கும் பகுதிகளையும் பல 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளையும் 24 மணி நேர மழை அளவுகள் பட்டியலில் காணலாம்.