இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 5 ஆகஸ்ட், 2020

05.08.2020 Record breaking rain in mumbai | Heavy rain lashes Mumbai and it's Suburbs | Active monsoon in Western Ghats of tamilnadu

0
05-08-2020 நேரம் இரவு 10:10 மணி #மும்பை மாநகரின் #colaba சுற்றுவட்டப் பகுதிகளில் இன்று தற்பொழுது வரையிலும் மட்டுமே 300 மி.மீ அளவு மழை பதிவாகிவிட்டது தொடர்ந்து அப்பகுதிகளில் மழை பதிவாகியும் வருகிறது.இவைத்தவிர்த்து இதுவரையில் #mumbai மாநகரின் #Mazgaon பகுதியில் 257 மி.மீ அளவு மழையும் #Chembur பகுதியில் 236 மி.மீ அளவு மழையும் #Diwale பகுதியில் 226 மி.மீ அளவு மழையும் பதிவாகியிருக்கிறது. மேலும் தொடர்ந்து அப்பகுதிகளில் மழை பதிவாகி வருவதால் #மும்பை மாநகர் பகுதிகளிலயே நாளை காலை 400 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பல்வேறு பகுதிகளிலும் பதிவாகலாம்.500 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை கூட சில இடங்களில் பதிவாகவும் வாய்ப்புகள் உள்ளது அதையும் நாளை காலை பார்த்து விடலாம்.

#Mumbai (#Colaba) வரலாற்றிலேயே #ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளில் பதிவாகிய அதிகபட்ச மழை அளவு என்பது 346 மி.மீ 1997 ஆம் ஆண்டு அது பதிவாகியிருக்கிறது நாளை அந்த சாதனை முடிவுக்கு வரும்.#Mumbai  மாநகரின் #August மாத வரலாற்றில் தற்போது பதிவாகி வரும் இந்த மழை இடம் பிடிக்கும்.
தமிழகத்தை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் குறிப்பாக #நீலகிரி மாவட்ட மேற்கு பகுதிகளிலும் #வால்பாறை சுற்றுவட்டப் பகுதிகளிலும் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பதிவாகி தான் வருகிறது மெழுகி தற்சமயம் #நெல்லை மற்றும் #குமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் சிறப்பாக காற்று குவிய தொடங்கி இருப்பதை அறிய முடிகிறது.மழை அளவுகளை பொறுத்தவரையில் நாளையும் பல 100 மி.மீ சில 300 மி.மீ கள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பட்டியளில் காத்திருக்கின்றன.#கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பதிவாகி வருகிறது #கபினி அணையில் இருந்து வினாடிக்கு 50,000 கண அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றது.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக