04-08-2020 நேரம் பிற்பகல் 1:50 மணி நாம் நேற்று எதிர்பார்த்து இருந்தது போல 04-08-2020 ஆகிய இன்று தற்சமயம் வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (#Low_Pressure_Area ) நிலவி வருவதை அறிய முடிகிறது அடுத்த 24 மணி நேரத்தில் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (#wellmarked_low_pressure_area) என்கிற நிலையை அடையலாம் அடுத்த சில மணி நேரங்களில் அது மேற்கு வங்க மாநில கடலோர பகுதிகளின் வழியே உள் நுழைந்து அடுத்து வரக்கூடிய நாட்களில் மேற்கு - வட மேற்கு திசையில் இந்தியாவின் மத்திய பகுதிகளில் நகர்ந்து செல்லும் இதன் காரணமாக அடுத்து வரக்கூடிய நாட்களில் தென்மேற்கு பருவமழை அரபிக்கடலை ஒட்டிய இந்தியாவின் மேற்கு மாநில கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மேலும் தீவிரமடையும்.இன்று அடுத்த 24 மணி நேரத்தில் #மும்பை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் குறிப்பாக கனமழை முதல் மிக கனமழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.அதேபோல #கரநாடக மாநில கடலோர மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் சிரப்பான மழை பதிவாகும் #கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பதிவாகும் கடந்த 24 மணி நேரத்தில் #மடிகேரி (#Madikeri) சுற்றுவட்டப் பகுதிகளில் 142 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.
தமிழக கடந்த 24 மணி நேர முழுமையான மழை அளவுகள் பட்டியலை அறிய - http://www.tamilnaduweather.com/2020/08/august-4-2020-heavy-rain-slashes.html
நீலகிரி மாவட்ட மேற்கு பகுதிகள் மற்றும் வால்பாறை சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திலும் கணமழை பதிவாகும் சில இடங்களில் மிக கணமழையும் பதிவாகலாம்.தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களை பொறுத்தவரையில் நேற்றைய சூழல்களே இன்றும் தொடரும் காற்றின் வேகம் அதிகரித்து இருக்கும்.இது தொடர்பாக சற்று முன்பு காணொளியையும் நமது Youtube பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறேன் - https://youtu.be/I6WtOxFlNWs
கடந்த 24 மணி நேரத்தில் கேரள மாநில இடுக்கி மற்றும் வயநாடு மாவட்டங்களில் சிறப்பான மழை பதிவாகியிருக்கிறது. #மூணாறு (#Munnar) சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 118 மி.மீ அளவு மழை பதிவாகி இருக்கிறது.
#Wayanad மாவட்டத்தில் #Vythiri - 133 மி.மீ மற்றும் #Mananthavady - 124 மி.மீ அதே போல #Idukki மாவட்டத்தில் #Peermade - 140 மி.மீ , #Idukki - 123 மி.மீ ,#myladumpara - 106 மி.மீ.
கடந்த 24 மணி நேரத்தில் மும்பை மாநகரை பொறுத்தவரையில்
#Mumbai (#Santacruz) - 269 மி.மீ
#Mumbai (#Coloba) - 252 மி.மீ
இவைத்தவிர்த்து
#LGPWORLI - 356 மி.மீ
#Oswalpark , #Thane - 176 மி.மீ
#Bandra - 165 மி.மீ