இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 13 ஜூலை, 2020

Upcoming Week Weather Forecast in Tamil | Tamilnadu Weather | 13 july 2020

0
அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம்?
====================
13-07-2020 நேரம் இரவு 9:30 மணி அடுத்து வரக்கூடிய நாட்களில் குறிப்பாக 15-07-2020 ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் அரபிக்கடலை ஒட்டியிருக்கும் இந்தியாவின் மேற்கு மாநிலங்களில் தீவிரமடைய வாய்ப்புகள் உள்ளது தற்சமயம் இந்தியாவின் கிழக்கு மத்திய பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது அடுத்து வரக்கூடிய நாட்களில் சற்று தீவிர மடைந்து மேற்கு நோக்கி நகர உள்ளது இதன் காரணமாக இந்தியாவின் மேற்கு கடலோர மாவட்டங்களில் தென்மேற்கு காற்று வீரியம் பெறுகிறது.இம்முறையும் இந்த காலகட்டத்தில் #மஹாராஷ்டிரம் மற்றும் #குஜராத்  மாநிலங்களே அதிக பலனை அடுத்து வரக்கூடிய வாரத்தில் அடையும் மேலும் #கர்நாடக மாநில கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் 15-07-2020 ஆம் தேதி அல்லது அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் இதன் காரணமாக கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் சிறப்பான மழை பதிவாகலாம் வடக்கு கேரள கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் அடுத்து வரக்கூடிய வாரத்தில் நல்ல மழை பதிவாகலாம்  தமிழகத்திலும் #நீலகிரி உட்பட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சிறப்பான மழை பதிவாகலாம்.17-07-2020 அல்லது 18-07-2020 ஆம் தேதி வாக்கில் அந்த மேலடுக்கு சுழற்சியானது குஜராத்தை ஒட்டிய வறண்ட பாகிஸ்தான் பகுதிகளை அடைந்து வலுவிழந்த பின்னர் மீண்டும் தென்மேற்கு காற்று இமயமலை அடிவார பகுதிகளை அடைய முற்படலாம் இம்முறை கொஞ்சம் வலுவாக இதன் காரணமாக 18-07-2020 அல்லது 19-07-2020 ஆம் தேதி முதல் #நேபால் ,#பூட்டான் நாடுகளிலும் #அஸ்ஸாம் ,#மேற்கு_வங்க மாநிலத்தின் வடக்கே இருக்கும்  இமயமலை அடிவார பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாக தொடங்கலாம் 20-07-2020 ஆம் தேதிகளின் வாக்கில் நான் குறிப்பிட்டு இருக்கும் அந்த மாநிலங்களின் இமையலை அடிவார பகுதிகளில் கடும் சேதங்கள் அதாவது நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

தமிழகத்தை பொறுத்தவரையில் 17-07-2020 அல்லது 18-07-2020 ஆம் தேதிகளின் வாக்கிலிருந்து மீண்டும் உள் மாவட்டங்களில் வெப்பசலன மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம்.#சென்னை ,#திருவள்ளுர் மற்றும் இதர சில வட கோடி மாவட்டங்களை பொறுத்தவரையில் தற்போதைய சூழல்களே அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தொடரும் அவ்வப்பொழுது சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம். வழக்கம்போல ஒவ்வொரு நாளும் அடுத்த 24 மணி வானிலையை பதிவிடுகிறேன்.

பூமத்திய ரேகை அருகே தெற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவி வரும் சுழற்சி தெற்கு கேரள மாவட்டங்களில் சிறப்பாக காற்று குவிவதற்கும்  #Monsoon_Surge அதனை ஒட்டிய தெற்கு அரபிக்கடல் பகுதிகளை அடைவதற்கும் சதாகமானதாக இல்லை என்றே குறிப்பிடலாம்.இதற்கு முக்கிய காரணம் பூமியின் தெற்கு அரைக்கோளத்தில் ஆஸ்திரேலியா அருகே நிலவி வரும் உயர் அழுத்தத்தின் தாக்கத்தால் நமக்கான தென்மேற்கு பருவகாற்றை தமது சூழற்சியால் வழங்கி வரும் மஸ்க்ரீன் உயர் அழுத்தத்தின் சுழற்சியில் ஏற்பட்டிருக்கும் சிறு தொய்வு என்றே சொல்லலாம். இது பூமத்திய ரேகை அருகே இருக்கும் தெற்கு இந்திய பெருங்கடலில் ஒரு தற்காலிக அழுத்த குறைபாட்டை ஏற்படுத்துகிறது அதனுடைய தாக்கம் பூமத்திய ரேகை அருகே இருக்கும் நமது வடக்கு அரைக்கோளத்தில் உயர் அழுத்தமாக வெளிப்படுகிறது.

மஸ்க்ரீன் உயர் அழுத்தத்துக்கும் தென்மேற்கு பருவமழைக்கும் இடையே உள்ள தொடர்பை அறிய - https://youtu.be/fJ9M979AuUs


அடுத்து பிறக்க இருக்கும் ஆகஸ்ட் மாதம் தெற்கு கேரளாவுக்கும் சிறப்பானதாக அமையும்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக