14-07-2020 நேரம் காலை 10:35 மணி கடந்த 24 மணி நேரத்தில் வேலூர் மாவட்டம் #குடியாத்தம் சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 51 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது இன்று அடுத்த 24 மணி நேரத்தில் நேற்றை போலவே அங்கும் இங்குமாக உள் மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாகும் நான் நேற்றைய பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல #கர்நாடக மற்றும் #மஹார்ஷ்டிர மாநில கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கலாம்.18-07-2020 அல்லது 19-07-2020 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் உள் மற்றும் கடலோர மாவட்டங்களில் பதிவாகும் வெப்பசலன மழையின் அளவு அதிகரிக்க தொடங்கும் இன்றும் #புலிகேட் ஏரி அருகே இருக்கும் தெற்கு ஆந்திர பகுதிகளில் மழை மேகங்கள் குவிய வாய்ப்புகள் உண்டு அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை நமது Youtube பக்கத்தில் பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
========================
குடியாத்தம் (வேலூர் மாவட்டம்) - 51 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 37 மி.மீ
பொண்ணை அணை (வேலூர் மாவட்டம்) - 35 மி.மீ
கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல் மாவட்டம்) - 32 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 30 மி.மீ
நிலக்கோட்டை (திண்டுக்கல் மாவட்டம்) - 29 மி.மீ
மேலலாத்தூர் (வேலூர் மாவட்டம்) - 28 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) - 28 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 26 மி.மீ
சேரங்கோடு (நீலகிரி மாவட்டம்) - 24 மி.மீ
அம்முடி (வேலூர் மாவட்டம்) - 18 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம்) - 17 மி.மீ
வேம்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 17 மி.மீ
வாலாஜா (ராணிப்பேட்டை மாவட்டம்) - 17 மி.மீ
ஜமீன் கொரட்டூர் (திருவள்ளுர் மாவட்டம்) - 16 மி.மீ
அவலூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம்) - 16 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) - 15 மி.மீ
சின்னக்கல்லாறு (கோவை மாவட்டம்) - 15 மி.மீ
வேலூர் (வேலூர் மாவட்டம்) - 14 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
உதகமண்டலம் கிழக்கு (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
செருமுள்ளி (நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
திருத்தணி (திருவள்ளுர் மாவட்டம்) - 9 மி.மீ
மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம்) - 8 மி.மீ
அம்பத்தூர் (சென்னை மாநகர்) - 7 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம்) - 6 மி.மீ
வைகை அணை (தேனி மாவட்டம்) - 6 மி.மீ
வடபுதுபட்டு (திருப்பத்தூர் மாவட்டம்) - 6 மி.மீ
செய்யூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 6 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
அரக்கோணம் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 5 மி.மீ
சோளிங்கர் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 5 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) - 5 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
5 மி.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.