27-07-2020 நேரம் காலை 11:10 மணி இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அங்கும் இங்குமாக சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாகலாம் நாளை மறுநாள் ஓரளவு பரவலான வெப்பசலன மழை பதிவாகவும் வாய்ப்புகள் உண்டு கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக #செங்கல்பட்டு மாவட்டம் #திருக்கழுக்குன்றம் சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 36 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவலை பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.
அடுத்து பிறக்க இருக்கும் ஆகஸ்ட் மாதம் தென்மேற்கு பருவமழைக்கு சிறப்பானதாக இருக்கலாம்.பூமியின் தெற்கு அரைக்கோளத்தில் நிலவும் சூழல்களே தென்மேற்கு பருவமழைக்கு ஆதாரம் என்று சொல்லலாம்.அந்த வகையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தெற்கு இந்திய பெருங்கடலில் 30°S இல் #மஸ்க்ரீன் (#Mascarene_High) உயர்அழுத்தம் மீண்டும் வீரியம் பெற உள்ளது இம்முறை இடையூறுகள் எதுவும் இன்றி மிக சிறப்பாக இதன் காரணமாக இந்த காலகட்டத்தில் குறிப்பாக ஆகஸ்ட் மாத முதல் வாரம் அதிலும் குறிப்பாக #ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் அதற்கு அடுத்துவரக்கூடிய சில நாட்கள் இந்திய தென்மேற்கு பருவமழைக்கு சிறப்பானதாக அமையலாம் மேலும் இந்த காலகட்டம் வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகவும் சதாகமானதாக இருக்கும் ஆனால் அது தமிழகத்துக்கு
நேரடியான பலனை வழங்கும் என எதிர்பார்க்காதீர்கள்.தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சிறப்பான மழை பதிவாகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
==========================
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 36 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம்) - 30 மி.மீ
ஸ்ரீபெரம்பத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 19 மி.மீ
பொண்ணை அணை (வேலூர் மாவட்டம்) - 13 மி.மீ
அம்முடி (வேலூர் மாவட்டம்) - 10 மி.மீ
ஊத்துக்குளி (திருப்பூர் மாவட்டம்) - 10 மி.மீ
பர்லியார் (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
வேலூர் (வேலூர் மாவட்டம்) - 9 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளுர் மாவட்டம்) - 8 மி.மீ
ராமநாதபுரம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 8 மி.மீ
பாபநாசம் (தஞ்சை மாவட்டம்) - 8 மி.மீ
ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்) - 7 மி.மீ
மாமல்லபுரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 7 மி.மீ
பொன்னேரி (திருவள்ளுர் மாவட்டம்) - 6 மி.மீ
அம்பத்தூர் (சென்னை மாநகர்) - 5 மி.மீ
குளித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 5 மி.மீ
நுங்கம்பாக்கம் (சென்னை மாநகர்) - 4 மி.மீ
திருத்தணி (திருவள்ளுர் மாவட்டம்) - 4 மி.மீ
அலக்கரை எஸ்டேட் ,குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 3 மி.மீ
அய்யம்பேட்டை (தஞ்சை மாவட்டம்) - 3 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 3 மி.மீ
கே.கே.நகர் (சென்னை மாநகர்) - 3 மி.மீ
சோழிங்கநல்லூர் (சென்னை மாநகர்) - 3 மி.மீ
அயனாவரம் (சென்னை மாநகர்) - 3 மி.மீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 3 மி.மீ
குடியாத்தம் (வேலூர் மாவட்டம்) - 2 மி.மீ
பெரம்பூர் (சென்னை மாநகர்) - 2 மி.மீ
அப்பர்பவாணி (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
செய்யூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 2 மி.மீ
காரையூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 2 மி.மீ
அண்ணா பல்கலைகழகம் , சைதாப்பேட்டை (சென்னை மாநகர்) - 2 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 1 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 1 மி.மீ
ஜமுனமரத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 1 மி.மீ
வானூர் (விழுப்புரம் மாவட்டம்) - 1 மி.மீ
புதுவை மாநிலம்
==============
புதுச்சேரி (புதுச்சேரி மாவட்டம்) - 4 மி.மீ